முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை நிறைவு

By Pandeeswari Gurusamy

|

Published on 20 Nov 2026, 1:40 PM

திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி வீட்டில் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.

மதுரையில் சட்டவிரோதமாகக் கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்ததாகக் கனிமவளத் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, இன்று மதுரை ஐயர் பங்களா எழில் நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு மற்றும் அவரது உறவினர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவடைந்துள்ளது. சோதனையின் போது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்த பேசிய முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி, “மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு கடந்த 2019-ஆம் ஆண்டு குவாரியைக் குத்தகைக்குக் கொடுத்துள்ளேன். அதைத் தவிர மற்ற விவகாரங்களில் என்ன நடந்தது என்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. குவாரியில் இருந்து மண், ஜல்லி, கல் என எதுவும் நான் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel