மிஸ்கின் தொட்ட சர்ச்சை … கீர்த்தி சுரேஷ் பதில்!

By Kavi

|

Published on 20 Nov 2026, 11:48 AM

மிஸ்கின் தொட்ட சர்ச்சை ... கீர்த்தி சுரேஷ் பதில்!

மிஸ்கின் தன்னை தொட்டு பேசியது தொடர்பாக ட்விட்டர் பயனர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் காட்டமாக பதில் அளித்துள்ளார். 

கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மிஸ்கின் இருவரும் இணைந்து நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷை, மிஸ்கின் பாராட்டி பேசினார். அவருக்கு மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வருகின்றன. 

அதோடு மிஸ்கின் கீர்த்தி சுரேஷ் அருகே அமர்ந்திருந்த போது அவரை தொட்டு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது. 

ADVERTISEMENT

இந்த வீடியோவில் மிஸ்கின் தொடும்போது கீர்த்தி சுரேஷ் அசௌகரியமாக உணர்கிறார் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். 

குறிப்பாக ஒரு ட்விட்டர் பயனர், திரைப்படங்களில் நடிகர்கள் தொடுவது போன்ற காட்சிகளில் நடிக்கின்றனர். ஆனால் இங்கே ஏன் இப்படி அசௌகரியமாக கீர்த்தி சுரேஷ் தெரிகிறார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

ADVERTISEMENT

இதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், “முதலில் என்னுடைய முகம் அசௌகரியமாக இருந்ததை நீங்கள் பார்த்தீர்களா. நாங்கள் ஒரு தந்தை மகள் போன்று உறவை பகிர்ந்து கொள்கிறோம் என்று நானும் சொல்லியிருந்தேன். அவரும் சொல்லியிருந்தார். இதை நீங்கள் கேட்கவில்லையா. 

இரண்டாவதாக, நான் அசௌகரியமாக உணர்ந்ததாகவே இருக்கட்டும்… திரைப்படங்களில் எங்களை தொடுகிறார்கள் என்பதற்காக பொது இடங்களிலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? சில விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு இருந்தார். 

நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த பதிலைத் தொடர்ந்து அந்தப் பயனார் தனது பதிவை நீக்கியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel