கல்குவாரி முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை!

By Mathi

|

Published on 20 Nov 2026, 8:11 AM

Moorthy DMk

கல்குவாரிகளில் விதிகளை மீறி செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் மதுரை வீட்டில் இன்று (நவம்பர் 20) காலை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முந்தைய திமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் மூர்த்தி. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

ADVERTISEMENT

இந்தப் புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மதுரையில் உள்ள மூர்த்தியின் வீட்டில் இன்று காலை போலீசார் சோதனையை நடத்தி வருகின்றனர். இதில் கல்குவாரிகளுக்கான டெண்டர் ஆவணங்கள், கற்கள் மற்றும் செம்மண் வெட்டி எடுக்கப்பட்ட விவரங்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து மூர்த்தியின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel