சட்டசபைக்குள் இருக்கும் தூங்கு மூஞ்சி மரங்களை என்ன செய்வீர்கள்?

By Kavi

|

Published on 20 Nov 2026, 9:46 AM

முன்னாள் முதல்வர் கலைஞரால் காப்பாற்றப்பட்ட ஒரு மரம் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார்.

சென்னை அரசினர் தோட்டத்தில் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்துக்காக இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதை பார்த்து பார்த்து கட்டியவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.

ADVERTISEMENT

இந்த கட்டுமான பணியின் போது நடந்த சுவாரசியமான விஷயத்தை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்,

ADVERTISEMENT

நினைவுகள் சுகமானவை

அரசினர் தோட்டத்தில்
புதிய தலைமைச் செயலகம்
கட்டிக்கொண்டிருந்த கலைஞர்
ஒவ்வொரு மாலையும் வந்து
அக்கறையோடு ஆய்வுசெய்வார்;
அதிகாரிகளை அழைத்து
ஆலோசனை வழங்குவார்

ADVERTISEMENT

கட்டடம்
நிறைவுபெறும் தருணம்
செயற்பொறியாளர் ஓடிவந்து
“நுழைவாயில் அருகே
ஒரு தூங்குமுஞ்சி மரம் இருக்கிறது;
அதை வெட்டிவிடலாமா?” என்றார்

கலைஞர் சொன்னார்:
“வெளியே இருக்கும்
தூங்கு மூஞ்சி மரத்தை
வெட்டிவிடுவீர்கள்;
சட்டசபைக்குள் இருக்கும்
தூங்கு மூஞ்சி மரங்களை
என்ன செய்வீர்கள்?”

காருக்குள்
கலைஞருக்குப் பின்னால்
இருந்த நான்
ஓசையோடு சிரித்துவிட்டேன்

முதலமைச்சர் முன்பு சிரிப்பதற்கு
அதிகாரம் இல்லாத அதிகாரி
வாயை மூடிக்கொண்டு
ஓடி ஒளிந்துவிட்டார்

கலைஞரின்
ஒரே ஒரு கேள்வியால்
ஒரு பெருமரம் காப்பாற்றப்பட்டது

கலைஞருக்கு
அந்த மரம்
இன்றும் நின்று நின்று
நன்றி சொல்லுமல்லவா!

நினைவுகள் சுகமானவை” என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel