வைஃபை ஆன் செய்ததும், “நான் யார்? நீ யார்? உறவார்? பகையார்?உண்மையை உணரார்! உனக்கே நீ யாரோ?”ன்னு டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ரீசன்ட் டேஸ் ரொம்பவே OG சாங்ஸாவே வருதே..
ப்ரோ… OG-ன்னாலும் Gold.. தானே.. எதுக்கு இந்த சாங்-ன்னு நீங்க கேட்கிறதுக்குள்ள நானே ஆரம்பிச்சுடுறேன் ப்ரோ…
பொதுவா எந்த கட்சியானாலும் ஆட்சியில இருக்கும் போது கோஷ்டிகளுக்கு பஞ்சம் இருக்காதுதான்.. சீனியர் அமைச்சர்களாக இருந்தாலும்கூட அவங்களுக்குள்ளேயும் அணி அணியா இருப்பாங்க.. திமுக, அதிமுக ஆட்சிக் காலத்துல இப்படி இருந்தவங்கதான்.. ஆனா இந்த மாதிரி கோஷ்டிகள் இருந்தாலும் எல்லாரையும் சிஎம் கண்ட்ரோல் பண்ணி வெச்சிருப்பார்.. இந்த கோஷ்டிகள் விவகாரமாக வெடிக்காத வகையில ஒரு லெவலில்தான் இருக்கும்.
இப்ப தவெக ஆட்சியில இருக்கு.. தவெகவில எப்படி இருக்குது?ன்னு கேட்டா…ஆமா இருக்குது… ஆனா இதுவரை இல்லாத வகையில இங்கே வேற ‘லெவல்’ கோஷ்டியாக சேருறாங்க ப்ரோ..
இதை பத்தி தவெகவில முக்கியமான நிர்வாகிகள்கிட்ட பேசுனப்ப, “எங்க கட்சியிலேயே கீழ்நிலையில இருந்து மாவட்டம் வரைக்கும் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகள்தான்.. ஈரோடு மாவட்டத்துல அடிதடி வரைக்கும் போய் அதை சோசியல் மீடியாவில போட்டுட்டாங்க..
மினிஸ்டர்ஸ் லெவலில் வேற மாதிரி பிரச்சனையாக இருக்கு. சிஎம் விஜய்யை சுற்றி இருக்கிறது மூணு பேரு. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ். இதுல ஜெகதீஷ் தன்னை ”Private Secretary to the Hon’ble Chief Minister of Tamil Nadu”ன்னு ஓபனாகவே சோசியல் மீடியாவில போஸ்டிங் போட்டுகிட்டாரு..
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிக்கும் ‘சிஎம் அட்வைசர்’ன்னு போஸ்டிங் கொடுக்கப்பட்டிருக்கு…சிஎம் விஜய் நடத்துற கேபினட் மீட்டிங், ஸ்டேட் செக்யூரிட்டி மீட்டிங்குன்னு முக்கியமான கூட்டங்களில் எல்லாம் ஜான், விஷ்ணு ரெட்டி கூடவே இருக்கிறாங்க.. கூட்டத்துல கலந்துகிட்டவங்க கையெழுத்து போடும் போது, “சிஎம் அட்வைசர்னு” இவங்களும் கையெழுத்து போடுறாங்க… ஆனா அவங்களை அப்பாயிண்ட் பண்ணின ஜிஓவைத்தான் என்ன காரணத்தாலோ வெளியில விடாமலேயே வெச்சிருக்காங்க..
இந்த மூணு பேரில் ஜெகதீஷ் ”ரூட்” தனி.. இங்கே இருந்துதான் சார் நீங்க புள்ளியை ஆரம்பிக்கனும்..
ஏன்னா, ”சிஎம் விஜய்கிட்ட ஜான் கைதான் ஓங்கி இருக்கு.. ஜான் சொல்றதைதான் சிஎம் விஜய் அதிகமாக கேட்கிறார்”ன்னு விஷ்ணு ரெட்டிக்கு ஏக வருத்தம்.
சரி.. அடுத்ததாக மினிஸ்டர்ஸை எடுத்துகிட்டீங்கன்னா அவங்களும் ஜான் மேல ரொம்பவே ‘காண்டு’தான். ஏன்னா, ”கட்சியில சீனியரா இருக்கிறோம்.. கேபினட்டிலும் சீனியரா இருக்கிறோம்.. என்ன காரணம்னு தெரியலை.. ஜான் எங்களை எல்லாம் டேமேஜ் பண்ற மாதிரியே சிஎம் விஜய்கிட்ட நெகட்டிவ்வாகவே சொல்லி வெக்கிறாரு.. ஜானும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்கும்தான் எங்களை பத்தி சிஎம்கிட்ட தப்பு தப்பா போட்டு கொடுக்கிறாங்க..”ன்னு அவங்க புலம்புறாங்க..
அதோட, “ஜான் ஒரு அட்வைசராதான் சிஎம் கிட்ட வந்தாரு.. அதுக்கான பணத்தை சிஎம் செக்காகவே கொடுத்தும் இருக்கிறார்.. ஆனா இப்பவும் உள்ளே வந்து உட்கார்ந்துகிட்டு சீனியர்களான எங்களையும் ‘நாட்டாமை’ பண்ணிகிட்டுதான் இருக்கிறார் ஜான்”.. அப்படின்னும் சீனியர் அமைச்சர்கள் நொந்து போறாங்க..
இவங்கதான்னு இல்லை.. ஜூனியர் அமைச்சர்களுக்கு வேற வகையில சோதனை.. ‘ஜூனியர் ஜான்’ன்னு சொல்ற மாதிரி ஜான் கூடவே இருக்கிற ஒருத்தர்.. சின்ன வயசுதான்.. அவருக்கும் ஒரு போஸ்டிங் போட்டு கொடுத்திருக்காங்க.. அவரும் தன் பங்குக்கு ‘அமைச்சர்களை’ மிரட்டுற வேலையை செய்யுறாரு.. அமைச்சர்களை கூப்பிட்டு, “ஏன் நீங்க அப்படி பேசுனீங்க? இப்படிதானே பேசியிருக்கனும்?”ன்னு சொல்றார்.. அதோடு நின்னாலும் பரவாயில்லை.. அமைச்சர்களோட துறைகளிலும் தலையிட்டு, “அதை ஏன் அப்படி செஞ்சு வெச்சிருக்கீங்க? இதை இப்படி செஞ்சிருக்கக் கூடாதே.. டிரான்ஸ்பர் ஆர்டரை எல்லாம் கேன்சல் பண்ணிடுவேன்.. அந்த போஸ்டிங்கை அப்படி போடுங்க”ன்னு சலங்கை கட்டி ஆடுறார்.
இப்படி ஜான் மற்றும் ஜூனியர் ஜானால் பாதிக்கப்பட்ட அட்வைசர் விஷ்ணு ரெட்டி, சீனியர் அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் எல்லாம் ஒரு கோஷ்டியாகிட்டாங்க..
ஒரு கட்டத்துல ஏன் இந்த மாதிரி நெகட்டிவ்வாக சிஎம்கிட்ட போய் சொல்றீங்கன்னு ஐஜி அஸ்ரா கார்க்கிடமே ஒரு சிலர் கேட்டப்ப, “நான் சிஎம்மை பார்க்கனும்னாவே ஜான்கிட்டதான் அப்பாயிண்ட்மென்ட் கேட்கனும்.. அவர்தான் டைம் பிக்ஸ் பண்ணி தர்றாரு..”ன்னு சொல்லி இருக்கிறார்.. ஓஹோ.. அதனாலதான் ஜான் சொல்றதை எல்லாம் கேட்கிறார் அஸ்ரா கார்க்-ன்னு எல்லாருக்குமே புரிஞ்சும் போனது..
இந்த அதிருப்தி அணியோட முதல் பிரச்சனையே, சிஎம் விஜய்கிட்ட இதை எப்படி சொல்றது அப்படிங்கிறதுதான்.. அதுக்காக சில நாட்களுக்கு முன்னாடி இவங்க போய் சந்திச்சது ‘திரிஷாவை’…
அப்ப, இந்த சந்திப்பு, திரிஷா தலைமையில ஆலோசனை கூட்டமாக நடந்துச்சு.. அந்த கூட்டத்துல அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அட்வைசர் விஷ்ணு ரெட்டி எல்லாம் கலந்துகிட்டாங்க..
திரிஷாகிட்டேயும் ”ஜானும் அஸ்ரா கார்க்கும் சேர்ந்து இப்படி எல்லாம் பண்றாங்க.. சிஎம்கிட்ட சரியான நேரம் பார்த்து சொல்லனும்.. ஜானை சிஎம் விஜய்கிட்ட இருந்து வெளியே அனுப்பிடனும்..அப்பதான் பிரச்சனை சரியாகும்”னு ரொம்பவே குமுறிட்டாங்க..
இது எல்லாத்தையும் திரிஷாவும் கேட்டுகிட்டு, “சிஎம்கிட்ட சரியான நேரத்தில் சொல்றேன்”ன்னு பிராமிஸ் பண்ணினாங்க..
அதேநேரத்துல சிஎம் விஜய்யை பொறுத்தவரைக்கும் ஜானை முழுமையாகவே நம்புறார்.. எலக்ஷனுக்கு முன்னாடியே சிஎம்கிட்ட, ‘மேரி மாதா என் கனவில் வந்து நீங்கதான் ஜெயிப்பீங்கன்னு சொல்லி இருக்காங்க’ன்னு சொன்னார் ஜான்.. எலக்ஷன்ல ஜெயிச்சதுக்கு பிறகு, “ஆமாங்க.. உன்கிட்ட மேரி மாதா கனவில சொன்ன மாதிரி ஜெயிச்சுட்டோம்”னு மகிழ்ச்சியை ஜானிடம் சிஎம் விஜய் ஷேர் பண்ணிக்கிட்டாரு.. இது ஏன்னா அந்த அளவுக்கு ஜானை சிஎம் விஜய் ரொம்பவே நம்புறாரு.. அப்படி ஒரு மதமான இறுக்கம்னு சொல்லலாம்.
இப்ப திரிஷாவை தேடி போய் அவரு தலைமையில அணி சேர்ந்திருக்கிற டீம் ஜெயிக்க போகுதா? இல்லை சிஎம்- விஜய்யின் நம்பிக்கைக்குரிய ஜான் ஆரோக்கியசாமி ஜெயிக்கப் போறாரா? அப்படிங்கிறதுலதான் கிளைமாக்ஸ்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்கு போனது வாட்ஸ் ஆப்.









