வைஃபை ஆன் செய்ததும், “வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்..
பாசம் ஒரு தீபமே..”ன்னு ஹம்மிங் செய்தபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. எந்த மேட்டருக்காக இந்த சாங்-னு கேட்கலாமா?
ப்ரோ.. செய்திக்கு எல்லாம் சாங்கா?.. நீங்க கேட்காமலேயே விஷயத்தை சொல்றேன் ப்ரோ.. கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைந்துவிட்டார் இல்லையா? அவரோட மரணத்துல எப்படி என்னதான் சீக்ரெட்? அப்படிங்கிறதுதான் எல்லாருக்குமே இருக்கிற கேள்வி..
செப்டம்பர் 9-ந் தேதி மூச்சு திணறல் அப்படின்னுதான் எம்ஜிஎம் ஹாஸ்பிடலில் வி.எஸ். பாபு அட்மிட் செய்யப்பட்டார்.. செப்டம்பர் 22-ந் தேதி வரைக்கும் அவரோட ஹெல்த் கண்டிஷன் பற்றி ஹாஸ்பிட்டலும் ரிப்போர்ட் வெளியிட்டு வந்துச்சு.
செப்டம்பர் 23-ந் தேதி சிஎம் விஜய், எம்ஜிஎம் ஹாஸ்பிடலுக்கு போய் வி.எஸ். பாபு உடல்நிலையை பற்றி கேட்டுட்டு வந்தார்.. அதுக்கு பிறகு வி.எஸ்.பாபு ட்ரீட்மெண்ட் பற்றி ஒன்னும் தகவலே வரலை.. நாமதான், வி.எஸ்.பாபுவுக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை கொடுக்கிறாங்க.. அந்த சிகிச்சைன்னா என்னான்னு மின்னம்பலத்துல விலாவாரியா சொன்னோம்.. ஆனா அப்படி எல்லாம் எந்த ட்ரக்கியோஸ்டமி ட்ரீட்மெண்ட்டு தரலைன்னு வி.எஸ்.பாபு ஃபேமிலி சொல்றாங்கன்னும் நியூஸ் வந்துச்சு..
இதுக்கு அப்புறமா நவம்பர் 18-ந் தேதி, வி.எஸ்.பாபு ஹெல்த் அப்டேட் கேட்டு தேவராஜ்னு ஒருத்தர் கேஸ் போடப் போக.. நவம்பர் 19-ந் தேதி வி.எஸ். பாபு மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுச்சு..
வி.எஸ்.பாபு உடலுக்கு சிஎம் விஜய் அஞ்சலி செலுத்தினார்.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் போன்றவங்க கண்ணீர் சிந்தி அழுதாங்க..

ட்ரக்கியோஸ்டமி சிகிச்சைக்குப் பிறகு வி.எஸ்.பாபுவோட உடல்நிலை பற்றி ஏன் எந்த தகவலும் வரலை? கோர்ட்டுக்குப் போனதுக்கு பிறகு திடீர்னு அவர் மாரடைப்பால் காலமானார்னு அறிவிச்சிருக்காங்களே.. அப்படின்னா என்னதான் நடந்ததுன்னு நாம மருத்துவமனை வட்டாரங்களில் முதலில் விசாரிச்சப்ப, “ மூச்சு திணறல்னுதான் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம்.. ஆனால் டிரீட்மெண்ட் அவருக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கலை.. அதனால ட்ரக்கியோஸ்டமி ட்ரீட்மெண்ட் கொடுத்தோம்.. அப்பவும் ரிசல்ட் ஒர்க் ஆகலை.. அதனால என்ன செய்யலாம்?னு சிஎம் விஜய் சார் ஆபீஸுக்கு டிரை பண்ணினோம்.. தவெக சைடுல இருந்து பொறுங்க.. சொல்றோம்.. பொறுங்க சொல்றோம்.. அப்படின்னுதான் சொன்னாங்க.. எங்களுக்கு எந்த கைடென்ஸும் சரியாக கொடுக்கலை.. நேத்து நவம்பர் 19-ந் தேதி வி.எஸ்.பாபுவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.. அதுல அவர் உயிர் பிரிஞ்சது”ன்னு சொன்னாங்க ப்ரோ..
ப்ரோ.. வி.எஸ். பாபுவோட ட்ரீட்மெண்ட் செலவை எல்லாம் தவெகதான் ஏத்துகிச்சா?
இதை பத்தி நாம மின்னம்பலத்துல கூட, ஹாஸ்பிடல் பீஸ் பத்தி தவெக தரப்பில இருந்து சரியா ரெஸ்பான்ஸ் இல்லைன்னு பதிவு செஞ்சிருந்தோம்.. இப்ப வி.எஸ்.பாபு இறந்து உடலை ஒப்படைச்ச நேரத்துல இதை பத்தி நாம கேட்டப்ப, “செப்டம்பர் 23-ந் தேதி சிஎம் விஜய், ஹாஸ்பிடலுக்கு வந்து விஎஸ் பாபு உடல்நலனை விசாரிச்சார்.. அப்ப டாக்டர்ஸ்கிட்ட, “நல்லபடியா காப்பாத்தி கொடுங்க.. செலவை பத்தி யோசிக்காதீங்க”ன்னு சிஎம் விஜய் சொல்லி இருந்தார்.. இதுக்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் ரூ.25 லட்சம் பீஸ் கட்டினாரு.. அப்புறமா வி.எஸ். பாபு பேமிலியும் கொஞ்சம் பணத்தை புரட்டி கட்டினாங்க.. மொத்தமா ரூ90 லட்சம் பீஸ் கட்டி இருந்தாங்க..
வி.எஸ். பாபு இறந்தப்ப ஹாஸ்பிடல் பீஸ் மொத்தம் ரூ1.80 கோடி வந்துச்சு..இதுல ரூ90 லட்சம் ஏற்கனவே கட்டியாச்சு.. மிச்சம் ரூ90 லட்சம் கட்ட வேண்டியது.. என்ன செய்யுறதுன்னு வி.எஸ்.பாபு பேமிலி தவிச்சப்ப, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “பேமெண்ட்டை நான் கட்ட ஏற்பாடு செய்யறேன்.. நீங்க பாடியை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு ஆக வேண்ட்ய வேலையை பாருங்க”ன்னு சொன்னார்”ன்னு ஷேர் செஞ்சாங்க ப்ரோ.
ப்ரோ.. முக்கியமான சந்தேகம்.. வி.எஸ்.பாபுவுக்கு கொடுத்த ட்ரீட்மெண்ட்டுல ரிசல்ட் கிடைக்கலை.. அடுத்து என்ன செய்யலாம்னு கேட்டா ஏன் சிஎம் ஆபிஸ் சைடுல இருந்து, “பொறுங்க.. பொறுங்க”ன்னு காலம் தாழ்த்தினாங்களாம் ப்ரோ?
இதுதான் எல்லாருக்குமே இருக்கிற சந்தேகம் ப்ரோ.. இதை பத்தி தவெக சீனியர்கள் சிலர்கிட்ட பேசுனப்ப, “நீங்க கேட்கிறது நியாயமான கேள்விதான்.. வி.எஸ். பாபுவுக்கு கொடுத்த ட்ரீட்மெண்ட் ஒர்க் அவுட் ஆகலை.. ட்ரக்கியோஸ்டமி ட்ரீட்மெண்ட்டை ஸ்டாப் பண்ண வேண்டிய நிலைமையிலதான் ஹாஸ்பிடல் டீம் எங்க தவெக ஆபீஸையும் சிஎம் ஆபீஸையும் காண்டாக்ட் பண்ணினாங்க.. அப்பவே நிலைமை சிக்கலாதான் இருக்குதுன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு… இருந்தாலும் இதுல ஒரு அரசியல் கால்குலேஷனை எங்க தலைமை யோசிச்சது..
திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோர்ட் தடை விதிச்சு கேஸ் நடந்துகிட்டு இருக்கு.. எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த கேஸ் சீக்கிரம் முடிஞ்சிரும்.. எந்த நேரத்திலும் 5 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கோர்ட் அனுமதி கொடுக்கும்னுதான் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.. அதனாலதான் சிஎம் விஜய்யும் டூர் புரோகிராம் பிக்ஸ் பண்ணி இடைத்தேர்தல் நடக்க போகிற தொகுதிகளுக்கு விசிட் அடிச்சுகிட்டு இருக்கிறார்..
இந்த 5 தொகுதிகளோட சேர்த்து கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வருமோ? அப்படின்னு எங்களுக்கும் சந்தேகம் இருந்துச்சு.. 5 தொகுதிகளோட தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிச்சிருச்சுன்னா, வி.எஸ். பாபு இறந்துட்டா எப்படியும் கொளத்தூர் தொகுதிக்கு 6 மாசம் கழிச்சுதான் இடைத்தேர்தல் வரும்னு நாங்களும் நினைச்சோம்.. அதனால வி.எஸ்.பாபு உயிரை காப்பாத்த எல்லா ட்ரீட்மெண்ட்டையும் தொடர்ந்து கொடுக்க சொல்லி இருந்தோம்.. அவ்வளவுதான்.. ஆனா மாரடைப்பால அவர் உயிரிழந்துட்டார்”ன்னு சொல்றாங்க..
ஆனாலும், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை மோசமாகிடுச்சு.. ட்ரீட்மெண்ட் கை கொடுக்கலை.. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்னு புரிஞ்சுகிட்டுதான் சிஎம் விஜய் போன நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிற தொகுதிக்கு விசிட் அடிக்கிற மாதிரி கொளத்தூர் தொகுதியில குழந்தைகள் தின நிகழ்ச்சியில கலந்துகிட்டாராம்.. அப்ப வி.எஸ்.பாபுவுக்கு நெருக்கமானவங்ககிட்ட, “என்னதான் உடல்நலன் பிரச்சனை? ஏன் இப்படி கிரிட்டிக்கல் கண்டிஷனாகிடுச்சு”ன்னு சிஎம் விஜய் கேட்டாராம்.. அதுக்கு, “எல்லாமே” அவருக்கு அதிகம்தான்.. பொதுவாகவே கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துட்டு காலையில 3 மணிக்குதான் தூங்குவாரு.. எலக்ஷன்ல ஜெயிச்சதுக்கு பிறகு ரொம்பவே ‘உற்சாக’ மனநிலையிலேயே இருந்தாரு.. அதுதான் அவரோட ஹெல்த்தை ரொம்ப பாதிச்சிருச்சு”ன்னு சொன்னாங்களாம் ப்ரோ..






இப்ப கொளத்தூர் இடைத்தேர்தலை சந்திக்குது இல்லைங்களா ப்ரோ?
ஆமாங்க ப்ரோ.. 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுடன் கொளத்தூருக்கும் பை எலக்ஷன் நடக்க போகுது.. நேத்து வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தின சிஎம் விஜய் இன்னைக்கும் வந்திருந்தார்.. அதோட வி.எஸ்.பாபு உடலை சிஎம் விஜய், தன் தோளில் சுமந்து அமரர் ஊர்தி வேனில் ஏற்றினாரு.. இறுதி ஊர்வலத்துல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் புடைசூழ சிஎம் விஜய் நடந்து சென்றாரு..

இதுக்கு நடுவே, “கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டி போறாங்க”ன்னு சிலர் கொளுத்திப் போட சிஎம் விஜய் உட்பட ஒட்டுமொத்த அமைச்சர்களும் “அப்படியா?” “அப்படியா?”ன்னு அதிர்ச்சியுடன் மிரட்சியுடன் கேட்டுகிட்டு இருக்கிறாங்களாம் ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.









