மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேரணுமா? CUET UG 2026 விண்ணப்பம் தொடங்கியது… கட்டணம் & முழு விவரம் இதோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

cuet ug 2026 registration started exam date fees apply online

“பிளஸ் 2 முடிச்சுட்டு சென்ட்ரல் யுனிவர்சிட்டில படிக்கணும்னு ஆசையா? இதோ அதற்கான நேரம் வந்தாச்சு!” மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் (Undergraduate Courses) சேர்வதற்கான CUET UG – 2026 நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தேசியத் தேர்வு முகமை (NTA) இந்தத் தேர்வை நடத்துகிறது.

முக்கியத் தேதிகள் (Important Dates):

ADVERTISEMENT
  • விண்ணப்பம் தொடக்கம்: ஜனவரி 3, 2026.
  • கடைசித் தேதி: ஜனவரி 30, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி: ஜனவரி 31, 2026.
  • விண்ணப்பத் திருத்தம் (Correction Window): பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 4, 2026 வரை.
  • தேர்வு தேதி: மே 11 முதல் மே 31, 2026 வரை (கணினி வழித் தேர்வு).

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):

மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் (அதிகபட்சம் 3 பாடங்கள் வரை ஒரு கட்டணம்).

ADVERTISEMENT
  • பொதுப் பிரிவினர் (General): ரூ.1,000 (கூடுதல் பாடத்திற்கு ரூ.400).
  • ஓபிசி (OBC) / EWS: ரூ.900 (கூடுதல் பாடத்திற்கு ரூ.375).
  • எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள்: ரூ.800 (கூடுதல் பாடத்திற்கு ரூ.350).
  • வெளிநாட்டு மையங்கள்: ரூ.4,500.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இணையதளம்: https://cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பதிவு: முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Registration for CUET (UG) – 2026’ லிங்க்கை கிளிக் செய்து, புதிய பதிவை (New Registration) உருவாக்கவும்.
  • விவரங்கள்: பெயர், ஆதார் எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களைப் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.
  • கட்டணம்: ஆன்லைன் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • பிரிண்ட்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரு பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மாணவர்களே… தமிழ்நாட்டுல இருக்கிற திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட இந்தியா முழுக்க உள்ள 46 சென்ட்ரல் யுனிவர்சிட்டிகள்ல சேர இந்தத் தேர்வுதான் கேட் பாஸ் (Gate Pass).

ADVERTISEMENT

தமிழ் உட்பட 13 மொழிகள்ல இந்தத் தேர்வை எழுதலாம். நீங்க பிளஸ் 2 படிக்கிறப்போவே இந்தத் தேர்வுக்கு அப்ளை பண்ணலாம். கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணாம, இப்பவே ஆதார் கார்டு, போட்டோ எல்லாம் ரெடி பண்ணி அப்ளை பண்ணிடுங்க. உங்க கனவு கேம்பஸ் உங்களுக்காகக் காத்திருக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share