Video : “நீ TVK-னா பயந்துடுவாங்களா?” – ஷோரூமில் புகுந்து ரகளை செய்த தவெக நிர்வாகியை விளாசிய பெண் உரிமையாளர்!

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 5:14 PM

கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் இருசக்கர வாகன ஷோரூமிற்குள் புகுந்து வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட தவெக நகரச் செயலாளரை, அந்த ஷோரூமின் பெண் உரிமையாளர் காட்டமாக பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்து உள்ள கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில் ‘ஏ.என்.எஸ் (ANS)’ என்ற பெயரில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கும் ஷோரூம் இயங்கி வருகிறது.

ADVERTISEMENT

ஏ.என்.எஸ் ஷோரூம் உரிமையாளரிடம் தவெக இளைஞர் அணிப் பொறுப்பு வாங்கித் தருவதற்காக தவெக நகரச் செயலாளர் பிரகாஷ் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 1 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, த.வெ.க நகரப் பொறுப்பாளர் பிரகாஷ் கலிங்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அந்த ஷோரூமிற்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு உரிமையாளர் இல்லாத நிலையில், அங்கு இருந்த உரிமையாளரின் மனைவியிடம் பிரகாஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரம் அடைந்த ஷோரூமின் பெண் உரிமையாளர், பிரகாஷின் நடவடிக்கைகளை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செயது சரமாரியாக திட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பெண உரிமையாளர், ​”பெரிய ரவுடியா நீ? உன் திமிரு, தெனாவெட்டு எல்லாம் வெளியே வச்சுக்கோ. நீ டி.வி.கே (TVK)-னா பயந்துவிடுவார்களா? நீ ஷோரூமுக்குள்ள வந்து வண்டியை எதுக்குத் தொடுற ? ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்க நீ… பொம்பளை கிட்ட வந்து வீரத்தைக் காட்டுறியா? வெளியே போ… ஷோரூமில் இருந்து முதலில் வெளியே போ. இவன் லஞ்சம் வாங்கியிருக்கான், நான் லஞ்சம் வாங்கியதை கண்டிப்பாக ஆதாரத்தோடு நிரூபிப்பேன்” ​என காட்டமாக விமர்சித்ததோடு பிரகாஷை ஷோரூமில் இருந்து வெளியேற்றும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காரமடை த.வெ.க ஒன்றிய செயலாளர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் மற்றும் சாதி வன்கொடுமைப் புகார் அளித்த நிலையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் த.வெ.க நிர்வாகி ஒருவர் ஷோரூமில் ரகளையில் ஈடுபட்டதாகவும், கட்சிப் பதவிக்காகப் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel