பட்டப்பகலில் நடத்துநருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 3:37 PM

சென்னையில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து தற்காலிக அரசுப் பேருந்து நடத்துநரை அரிவாளால் வெட்டும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து தற்காலிக நடத்துநர் நித்தியநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

தேவர் ஜெயந்தியின் போது தற்காலிக நடத்துநரின் நண்பருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக, நண்பருக்குப் பதிலாக நடத்துநரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பயணிகள் சிதறியடித்து ஓடினர். படுகாயமடைந்த நடத்துநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

நடத்துநர் நித்தியநாதன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel