டிஜிட்டல் திண்ணை: பெண்களுக்கு மாதம் ரூ,2,500.. பயனாளிகள் எண்ணிக்கை குறைப்பு? அரசு கட்டுமான பணிகள் நிறுத்தம்? கோட்டையில் சிஎம் விஜய் சீரியஸ் ‘டிஸ்கஷன்’!

Published On:

| By Minnambalam Desk

CM Vijay Holds Discussions on ₹2,500 Aid for Women

வைஃபை ஆன் செய்ததும், “தண்ணி இல்லா காட்டக் கூட.. தன்னால ஆக்க வந்தவரு”ன்னு சிஎம் விஜய் (CM Vijay) பாட்டை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. டிவிகே மீட்டிங் பக்கம் இருந்து வர்றீங்களா?

கோட்டை வழியா வரும் போது கேட்ட பாட்டப்பா.. கோட்டை மேட்டர்ஸ் சொல்றேன் கேளுப்பா…

ADVERTISEMENT

ம்ம்.. சொல்லுங்க ப்ரோ.. சிஎம் சார் என்ன செய்யறார் கோட்டையில?

சிஎம் விஜய்யைப் பொறுத்தவரைக்கும் காலை 10 மணிக்கு கோட்டைக்கு வந்துடறாரு.. மதியம் லஞ்ச் இங்கேயே முடிச்சுட்டு சாயங்காலம் 5 மணிக்குதான் கிளம்பறாரு.. இது ரொட்டீனா நடக்குது..

சிஎம் உட்கார மர நாற்காலி இருந்துச்சு.. அதை மாத்தி குஷன் சேர் போட்டிருக்காங்க.. இதனோட ரேட்டை பத்திதான் இப்பவும் சோசியல் மீடியாவில விமர்சிச்சுகிட்டு இருக்காங்க..

ADVERTISEMENT

சிஎம் விஜய் ரெகுலரா நடத்துற முக்கியமான டிஸ்கஷனே எலக்‌ஷன்ல கொடுத்த வாக்குறுதியைப் பத்திதானாம்.. அதாவது பெண்களுக்கு மாசம் ரூ.2,500 எப்ப கொடுக்கப் போறோம் அப்படிங்கிறதை பத்திதானாம்..

இதை பத்தி கோட்டை அதிகாரிகள்கிட்ட பேசுனப்ப, “சிஎம்மைப் பொறுத்தவரைக்கும் இந்த ஸ்கீமை எப்படியாவது சீக்கிரமா இம்ப்ளிமெண்ட் பண்ணிடம்னு நினைக்கிறாரு.. இதை பத்திதான் டிஸ்கஷன் செய்யறாரு..

ADVERTISEMENT

திமுக கவர்மெண்ட்ல 1.31 கோடி பேருக்கு மாசம் ரூ1,000 கொடுத்தாங்க..அதாவது மாசம் ரூ1,310 கோடின்னா வருஷத்துக்கு ரூ15,720 கோடி கொடுத்தாங்க..

எலக்‌ஷன் அப்ப மாசம் ரூ2,000 தருவோம்னு எக்ஸ் சிஎம் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தாரு இல்லையா? அதுக்கான பண்ட் எப்படி ஒதுக்கிறதுன்னு கால்குலேஷன்ஸ் சொல்லி இருப்பீங்கதானே?ன்னு அதிகாரிகள்கிட்ட அந்த விவரங்களையும் முழுசா கேட்டு வாங்கிட்டாரு சிஎம் விஜய்.

1.31 கோடி பேருக்கு மாசம் ரூ2,500- கொடுத்தா மாசத்துக்கு ரூ.3,275 கோடி ஒதுக்கனும்.. அதாவது 12 மாசத்துக்கும் ரூ39,300 கோடி ஒதுக்கனும்னு அதிகாரிகள் சொல்லி இருக்காங்க..

அதுக்கு சிஎம் விஜய், “மாசம் ரூ2,500 ரெகுலரா போகனும்.. எந்த லேட்டும் ஆகாம கரெக்ட்டா போகனும்.. இந்த கமிட்மெண்ட்டை நிறைவேத்த ஃபண்ட் பிரச்சனையா இருக்குதுன்னா, சில ப்ராஜெக்ட்டுகளை நிறுத்தலாமா?”னு கேட்டிருக்காரு..

அப்ப அதிகாரிகள், “ஸ்மார்ட் மீட்டர் பொருத்துற திட்டத்துக்கு ரூ10,000 கோடி செலவாகுது.. திருவான்மியூர்- உத்தண்டி மேம்பால செலவு ரூ2,100 கோடி ஒதுக்கி இருக்கிறோம்”னு சொல்லி லிஸ்ட் போட்டாங்க..

இதை உன்னிப்பா கேட்ட சிஎம் விஜய், “ இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம், திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட மேம்பாலம் கட்டுறது மட்டுமில்லாம தமிழ்நாடு முழுவதும் புதுசா நடக்குற கவர்மெண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க்ஸ், ஸ்கூல் பில்டிங்ஸ் கட்டுறது, ரோடு போடுறதுன்னு எல்லாத்தையும் கொஞ்ச காலம் நிறுத்தி வைச்சுட்டு அந்த ஃபண்ட்டை முழுசா இதுக்கு டைவர்ட் செஞ்சா சரியா வருமா?ன்னு கேட்டாரு..

அதே மாதிரி திமுக ஆட்சியில “1.31 கோடி பேருக்கு கொடுத்தாங்க இல்லையா? அதுலேயே 50 லட்சம் பேரை பில்ட்டர் பண்ணி ரிமூவ் பண்ணியாச்சுன்னா 80 லட்சம் பேருக்கு ரூ2,500-ன்னா மாசம் ரூ2,000 கோடி தேவைப்படும்.. வருஷத்துக்கு ரூ. 24,000 கோடி.. இந்த மாதிரி பயனாளிகள் எண்ணிக்கையை குறைச்சுட்டாலும் ஃபேலன்ஸ் செஞ்சுடலாமா? அப்படின்னும் கேட்டார் சிஎம்.

பொதுவாக பெண்களுக்கான மாசம் ரூ2,500 ஸ்கீம், பண்ட் டிஸ்டர்ப் இல்லாமல் ரெகுலரா கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செய்யனும் அப்படிங்கிறதுலதான் சிஎம் விஜய் சீரியசா டிஸ்கஸ் செஞ்சுகிட்டு இருக்கிறார்.. ”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share