உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

bojarajan

தமிழக சட்டமன்ற தேர்தலில் உதகமண்டலம் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போஜராஜன், திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் ராமச்சந்திரன், தவெக சார்பில் இப்ராஹிம், நாதக சார்பில் ரகுபதி பீமன் ஆகியோர் களம் கண்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவித்து வருகிறது. அந்தவகையில் உதக மண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

தவெக வேட்பாளர் இப்ராஹிமை 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

தற்போதைய நிலவரப்படி வேறு எந்த தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இல்லை.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share