வங்கி ஊழியர் ஸ்டிரைக்: 3 நாட்களுக்கு ATM கட்டணம் ரத்து-அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

Bank-ATM

வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், ATM சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

எந்த ATM-லும் பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை

அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாட்டில் உள்ள எந்த வங்கியின் ATM-ஐ பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் PNB-ன் ATM மற்றும் CRM இயந்திரங்கள் முழுமையாகச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று Bank of Baroda-வும் செப்டம்பர் 28 முதல் 30 வரை நாட்டில் உள்ள எந்த வங்கியின் ATM மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. Bank of Baroda ATM மற்றும் பணம் செலுத்தவும் எடுக்கவும் பயன்படும் CRM இயந்திரங்கள் முழுமையாகச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Canara Bank வாடிக்கையாளர்களுக்கும் குட்நியூஸ்

Canara Bank தனது வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கும் ATM கட்டணத்தில் விலக்கு அளித்துள்ளது. இந்த மூன்று நாட்களிலும் Canara Bank வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ATM-களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது. அதேபோன்று மற்ற வங்கிகளின் பணம் டெபாசிட் செய்யும் BNA இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும் கட்டணம் கிடையாது என்று Canara Bank தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

UPI, IMPS, RTGS, NEFT இயங்குமா?

இதற்கிடையே வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் UPI, IMPS, RTGS மற்றும் NEFT சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

Mobile Banking, Internet Banking, WhatsApp Banking உள்ளிட்ட டிஜிட்டல் வங்கிச் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே 3 நாள் வேலைநிறுத்தத்தின்போது வங்கி கிளைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டாலும், ATM மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share