வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… ஞாயிறு பணிக்காக டபுள் ஓவர்டைம் ஊதியம்!

Published On:

| By Mathi

Sunday Bank

வங்கிப் பணிக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப்டம்பர் 27) வந்த ஊழியர்களுக்கு இரட்டிப்பு விகிதத்தில் ஓவர்டைம் ஊதியமும், அதிகாரிகளுக்கு ஒரு நாள் ஊதியமும் வழங்கப்படும் என்று வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான UFBU அறிவித்துள்ளது.

செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நேற்று இரவு நடைபெற்ற IBA-UFBU பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக UFBU செப்டம்பர் 27 அன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஞாயிறு வங்கி பணியும் டபுள் ஓவர்டைம் ஊதியமும்

இது தொடர்பாக UFBU வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிகளை ஞாயிற்றுக்கிழமையும் திறந்து செயல்பட RBI அனுமதி அளித்திருந்ததால், அன்றைய தினம் வங்கிக் கிளைகளுக்குப் பணிக்கு வருமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விடுமுறை நாளில் பணியாற்றியதற்கான ஊதியம் தொடர்பான பிரச்சினை பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டது.

இதன்படி, இருதரப்பு ஒப்பந்த விதிகளின்படி வங்கி ஊழியர்களுக்கு இரட்டிப்பு விகிதத்தில் ஓவர்டைம் ஊதியம் வழங்கப்படும். பணிக்கு வந்த அதிகாரிகளுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் போராட்டம் முழுவதும் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் உறுதியுடன் செயல்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றம் அனைத்தும் உறுப்பினர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதேநேரத்தில் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம். அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் செயல்படுத்தப்படுகிறதா என்பது உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் குறித்து UFBU மறுபரிசீலனை செய்யும்.

ADVERTISEMENT

தற்போதைய முன்னேற்றம் சாதகமான திசையில் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பு உண்மையானது. நமது ஒற்றுமையும் உறுதியும் தொடர்கிறது. இவ்வாறு UFBU வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share