தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ஆவடி சட்டசபை தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என பார்க்கலாம்
வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் முடிவு

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஆவடி தொகுதி.. அமைச்சர் சா.மு.நாசர் தொகுதி.. போன 2021-ல் 55,275 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் சா.மு.நாசர், அதிமுகவின் மாஃபா பாண்டியராஜனை தோற்கடிச்சிருந்தார்.. சர்ச்சைகள் சிக்கினாரு.. அப்புறமா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மறுபடியும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.. இந்த முறை மறுபடியும் அமைச்சர் நாசர் போட்டியிடுகிறார்.. அதிமுகவில் மட்டுமல்ல அரசியலில் இருந்தே மாஃபா பாண்டியராஜன் ஒதுங்கிட்டாரு.. இந்த முறை ஆவடி தொகுதி பாஜகவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது . பாஜகவின் ராஜ சிம்மா மஹிந்திரா, இந்த தொகுதியில போட்டியிடுகிறார்.. சரி கள நிலவரம் எப்படி இருக்கிறதுன்னா இங்கேயும் திமுக நல்ல லீடிங்கில் முன்னிலையில் இருக்கிறது என சொல்லலாம்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 42%
அதிமுக கூட்டணி – 24%
தவெக- 26 %
நாதக- 7% வாக்குகள் பெறும்
திமுக வேட்பாளர் அமைச்சர் சா.மு.நாசர் எளிதாக வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்










