மிட்செல் மார்ஷ் தலைமையில் டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி இன்று (மே 1) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை அடுத்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதனை முன்னிட்டு முதல் அணியாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட தங்களது அணியை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களை வித்தியாசமான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் குழந்தைகள் உட்பட 2007 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மெக்ராத், மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளனர்.
We weren’t sure how to announce this year’s @T20WorldCup squad, so we asked a few of our friends to do it for us…#T20WorldCup pic.twitter.com/6rQZEe2LBQ
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
அதன்படி மிட்ச் மார்ஸ் தலைமையிலான 15பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்!
மிட்ச் மார்ஸ் (கேப்டன்), அஸ்டன் அகார், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேஷல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லீஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேதிவ் வாடே, டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Kit launched, skipper selected ✅
Mitch Marsh and @hcltech are locked in, and all of a sudden, the @T20WorldCup is starting to feel real!#T20WorldCup pic.twitter.com/c5EeI6tCMn
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
அத்துடன் டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் புதிய ஜெர்ஸியும் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா