முதல்வர் விஜயின் தனிச் செயலாளர்கள் நியமனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப் பதவியேற்றார்.

புதிய அரசு அமைந்த நிலையில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போது முதலமைச்சர் விஜயின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், தற்போது முதல்வர் விஜயின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரியா, முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share