டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் ‘விசில்’.. விஜய் பகீர் முடிவு.. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா.. நடந்தது என்ன? பரபர தகவல்!

Published On:

| By Mathi

AIADMK MLAs Resign DT

வைஃபை ஆன் செய்ததும், ”மறுபடியும் பரபரப்பு ப்ரோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ சொல்றீங்க?

ஆமாம் ப்ரோ.. விஜய் ஆட்சிக்கு ஆதரவா ஓட்டுப் போட்ட அதிமுகவின் (AIADMK) எஸ்பி வேலுமணி கோஷ்டி எம்.எல்.ஏக்களான மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் திடீர்னு இன்னைக்கு சபாநாயகரை சந்திச்சு ராஜினாமா கடிதம் கொடுத்துட்டாங்க..

ADVERTISEMENT

சபாநாயகர் சொன்னது என்ன?

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நேத்துதான் பிரஸ் மீட்டுல, “நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா என்பதை நான் தீர்ப்பு வழங்கும் போது தமிழ்நாடே தெரிந்து கொள்ளும். இருவேறு குழுக்களாக பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மனு கொடுத்து இருக்கிறார்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும் போது, நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும்”னு பேட்டி கொடுத்திருந்தாரு..

இன்று நடந்த ‘சம்பவங்கள்’

இந்த நிலையில இன்னைக்கு திடீர்னு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் பதவியை ராஜினாமா செஞ்சுட்டாங்க..

ADVERTISEMENT

இன்னொரு பக்கம் எஸ்பி வேலுமணி கோஷ்டியில இருந்து திலீபன் ஜெய் சங்கர், நடராஜன், பண்ருட்டி மோகன், ஆற்காடு சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர்னு 5 எம்.எல்.ஏக்கள், எடப்பாடியை சந்திச்சாங்க.. அதுக்கு அப்புறமா சபாநாயகர் ஜேசிடி பிரபாகரையும் சந்தித்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ்தான் நாங்க செயல்படுறோம்னு எடப்பாடி கொடுத்த லெட்டரையும் தந்திருக்காங்க..

சரி.. என்னதான் நடக்குதுன்னு விசாரிச்சப்ப, “விஜய் ஆட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டிருந்தாலும்.. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவங்களை தகுதி நீக்கம் செய்கிறேன்”ன்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிக்கிறதா இருந்தாராம்” ப்ரோ…

ADVERTISEMENT

விஜய்யின் பகீர் முடிவு என்ன?

ப்ரோ.. ஒரு நிமிஷம்.. இவங்க விஜய் ஆட்சிக்கு ஆதரவாதானே ஓட்டுப் போட்டாங்க.. அவங்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய முடிவு செய்யனும்?

கேள்வி கேட்டதும் நல்லதுதான்.. சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்க கிட்ட இதை பத்தி கேட்டப்ப, ”என்னதான் நம்மை ஆதரிச்சாலும் 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செஞ்சுடுங்கன்னு சிஎம் விஜய்தான் சொன்னார்.. இந்த யோசனையை சிஎம் விஜய்க்கு அழுத்தமா கொடுத்ததே அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமிதான்.

சிஎம் விஜய், ஜான் ஆரோக்கியசாமி ஆலோசனைகளைத்தான் முழுமையா நம்புறார்.. அவரு சொல்ற விஷயங்களை விஜய் இதுவரை கேட்டது எல்லாமே ஒர்க் அவுட் ஆகி இருக்கு..

எலக்‌ஷன் நேரத்துல அதிமுகவோடதான் கூட்டணி அமைக்கனும்னு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் எல்லாருமே விஜய்க்கு நெருக்கடி கொடுத்தாங்க.. ஆனா ஜான் ஆரோக்கியசாமிதான், “அதிமுகவோட கூட்டணியே வேண்டாம்.. நாம தனிச்சு நின்னாலுமே நிச்சயம் ஜெயிப்போம்”னு சொல்லி சர்வே ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொடுத்து விஜய்யை கன்வீன்ஸ் செஞ்சாரு..

அதேமாதிரிதான், எஸ்பி வேலுமணி கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சரவையில் சேர்க்கவே கூடாதுன்னும் அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்கிட்ட கட் அண்ட் ரைட்டாக சொன்னது..

”அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் மேல ஊழல் வழக்குகள் இருக்கு… அவங்களை நாம சேர்க்கிறதால அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் விசாரணைக்கு வரும்.. நமக்குதான் குடைச்சல்.. கெட்ட பேரு வரும்.. அதனால அவங்க சேர்க்க வேண்டாம்”னு சொன்னதோட, “பப்ளிக் ஒப்பீனியனும் இதுதான் பாருங்க”ன்னு அதுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்தார்..

இதையும் அக்செப்ட் பண்ணிகிட்ட சிஎம், “ஆட்சிக்கு ஆதரவே கொடுத்திருந்தாலும் 25 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செஞ்சுடுங்க.. அந்த 25 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும் போது நம்ம வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைப்போம்.. அப்ப நமக்கு ஈஸியா பெரும்பான்மையும் கிடைச்சுடும்”னு சொல்லிட்டார்..

இதை வைச்சுதான் சபாநாயகரும் 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்க இருந்தார்”ன்னு சொல்றாங்க ப்ரோ.

சரிங்க ப்ரோ.. எடப்பாடி பழனிசாமியை எஸ்பி வேலுமணி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் சந்திச்சிருக்காங்களே..

ஆமாங்க ப்ரோ.. என்ன நடக்குதுன்னு அதிமுக சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சொல்லி இபிஎஸ் கொறடா சபாநாயகர் கிட்ட மனு கொடுத்திருக்காரு.. இந்த மனு மீது சபாநாயகர் முடிவை சொல்றதுக்கு முன்னாடி.. வாக்கெடுப்பு நடந்த 15 நாட்களில் கொறடா உத்தரவை மீறி ஓட்டுப் போட்ட எம்.எல்.ஏக்களை கட்சித் தலைமை மன்னிச்சுட்டா தகுதி நீக்கம் செய்ய முடியாதுன்னு அரசியல் சட்டத்துல இருக்கு..

இந்த 15 நாட்களுக்கான கெடு நாளை மறுநாள் முடியுது.. இன்னொரு பக்கம் அமைச்சர் பதவி தர முடியாதுன்னு விஜய் கையை விரிச்சுட்டாரு..

இதனால வேறவழியே இல்லாம எடப்பாடிகிட்டே ‘சரண்டர்’ ஆவதுன்னுதான் எஸ்பி வேலுமணி டீம் முடிவு செஞ்சு பேச்சுவார்த்தையை நடத்துச்சு..

இந்த பேச்சுவார்த்தையில, “எங்ககிட்ட பறிச்ச கட்சி பதவிகளை திரும்ப கொடுத்துடுங்க”ன்னு எஸ்பி வேலுமணி டீம் டிமாண்ட் வெச்சது..

எடப்பாடி சொன்னது என்ன?

இதுக்கு எடப்பாடி பழனிசாமி, “கொறடா உத்தரவை மீறி ஓட்டுப் போட்டதுக்கு மன்னிப்பு கடிதம் கொடுங்க.. இதுக்கு முன்னாடி 6 தொகுதிகளுக்கு சேர்த்து மா.செ.வா இருந்தீங்க.. ஆனா இனி 2 தொகுதிகளுக்குதான் மா.செ.வா இருக்க முடியும்.. இதை அக்செப்ட் பண்ணிகிட்டா வாங்க”ன்னு சொல்லிட்டாரு..

இந்த ரெண்டையுமே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்தால ஏத்துக்க முடியலை..

சிவி சண்முகத்தைப் பொறுத்தவரைக்கும் தனக்கு சப்போர்ட்டான எம்.எல்.ஏக்களோட தவெகவில போய் சேர்ந்துடுவோம்னு முடிவில இருக்கிறார்

எஸ்பி வேலுமணியோ, “நான் அழிஞ்சாலும் பரவா இல்லை.. எடப்பாடியை அழிக்காம விடமாட்டேன்..”ன்னு ரொம்பவே கோபமாக பேசியிருக்கிறாரு..”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இவ்வளவுக்கும் பிறகுதான் ஒரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவும் இன்னொரு பக்கம் எடப்பாடிகிட்டேயே சரண்டர் ஆகுற சம்பவங்களும் நடந்துகிட்டு இருக்கு..

தவெகவில் ஐக்கியமான மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

ஆமாம் ப்ரோ.. ராஜினாமா செஞ்ச எம்.எல்.ஏக்கள் அடுத்து என்ன செய்வாங்க?

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்ச 3 பேருமே தலைமை செயலகத்திலேயே மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாவை நேரில சந்திச்சு தவெகவில இணைஞ்சுட்டாங்க.. அங்கேயே தவெக உறுப்பினர் அட்டையும் கொடுத்தாச்சு..

அதெப்படி ’தலைமை செயலகத்தில்’ உடனுக்குடன் எல்லாமே நடக்குது?ன்னு கேட்டப்ப, “அதிமுக எம்.எல்.ஏ.க்கள்கிட்ட நேத்து நைட்டே ஆதவ் அர்ஜூனா பேச்சுவார்த்தை நடத்தி, “நீங்க எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு தவெகவில இணைஞ்சுடுங்க..

உங்க தொகுதியிலேயே மறுபடியும் தவெக வேட்பாளரா விசில் சின்னத்துல போட்டியிடுங்க.. ஒரு பைசா செலவே இல்லாம உங்களை ஜெயிக்க வைக்கிறோம்”ன்னு வாக்குறுதி கொடுத்தாராம்..

இதுக்கு அப்புறம்தான் இன்னைக்கு தலைமை செயலகத்துல இத்தனை களேபரங்களும் நடந்துச்சாம்..

அதோட, “சிஎம் விஜய்யைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் ஆதரவோடதான் நம்ம ஆட்சி நடந்துகிட்டு இருக்கு.. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செஞ்சு இடைத்தேர்தல் நடக்கும் போது நாம ஜெயிச்சுட்டா நமக்கு தனிப் பெரும்பான்மையான மெஜாரிட்டியே கிடைச்சுரும்.. அப்ப மத்த கட்சிகளை நம்பி நாம இருக்க வேண்டிய அவசியமும் இல்லை”ன்னு போடுற ப்ளான்தான் இத்தனைக்கும் காரணம் ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share