வைஃபை ஆன் செய்ததும், “அதிகாரம் ஆசை.. அலைபாயுதே..
எதிர்நீச்சல் போடும் மனமே”ன்னு மெர்சல் பாட்டை பாடியபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ. .சிஎம் விஜய் (VIJAY) பத்தின நியூஸா?
சிஎம் விஜய் பத்தின நியூஸ்தான் தினமும் டிவியில வருதே.. டிவிகே பத்தின தகவல் ப்ரோ..
அடடே.. சொல்லுங்க ப்ரோ..
தவெகவில என்னதான் நடக்குதுன்னு சிஎம் விஜய்யை ”சுற்றி இருக்கிறவங்க”கிட்ட பேசுனப்ப, “எலக்ஷன் அப்பவே கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவங்களுக்கு எல்லாம் சீட் கொடுக்கிறதான்னு ரசிகர் மன்ற ஆட்கள் கோபப்பட்டாங்க.. அதை மேனேஜ் செஞ்சாச்சு..
எலக்ஷன் முடிஞ்சு ஆட்சி அமைச்ச நாளில் இருந்தே.. ”அவங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவி கொடுக்கிறீங்க.. ரசிகர் மன்ற காலத்தில இருந்து உழைக்கிற எங்களுக்கு பதவி இல்லையா?”ன்னு சிலர் கொந்தளிச்சுகிட்டுதான் இருக்காங்க.. மதுரை கல்லாணை, ஈசிஆர் சரவணமூர்த்தி, காஞ்சிபுரம் முனிரத்னம்னு சிலர் ரொம்பவே நெருக்கடி கொடுத்துகிட்டுதான் இருக்காங்க..
இதுல வேடிக்கை என்னான்னா, எலக்ஷன் நேரத்துல ரெண்டு வார்த்தையை கூட கோர்வையா சொல்ல முடியாம பக்கத்துல இருக்கிறவர் சொல்றதை கூட சரியா சொல்லாம தத்தளிச்சு வைரலான பென்னாகரம் கஜேந்திரன் கூட அமைச்சர் பதவி கேட்கிறதுதான் எங்களுக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு..
இது ஒரு பக்கம்னா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் ‘எங்களுக்கு மா.செ.’ பதவி கொடுத்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறாங்க.. அதனாலதான் பேசாம ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 மா.செ.ன்னு போட்டுட்டா கட்சி பதவிகளை நிறைய பேருக்கு கொடுத்த மாதிரி இருக்கும்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க.. சீக்கிரம் பரபரப்பான செய்திகள் தவெகவில் இருந்து உங்களுக்கு வரும் சார்”னு ட்விஸ்ட் வைக்கிறாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
