ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Kavi

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வழங்கினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து இவர்கள் அமைச்சரும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர்

இந்த மூன்று தொகுதிகளுடன் ஏற்கனவே முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 4 தொகுதிகள் காலியாக உள்ளன. விரைவில் இங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share