த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

தமிழ்நாடு முதல்வர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

முதல்வர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய் முதல்வரான பிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேசமயம் முதல்வரின் தோழியான த்ரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக விஜய்யுடன் எடுத்த புகைப்படத்துடன் எதாவது ஒரு கேப்ஷன் போட்டு வாழ்த்து பதிவு வெளியிடுவார்.

ADVERTISEMENT

ஆனால் இந்த முறை ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். என்ன சொல்ல போகிறாரோ என்ற பதற்றமும் அவரது கட்சியினரிடம் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை முதல்வர் விஜய் தன்னுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

ADVERTISEMENT

“எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். அதில் 00:00 என்றும் குறிப்பிட்டுள்ளார். சரியாக இரவு 12 மணிக்கு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதை குறிக்கும் வகையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக சட்டப்பேரவையில் அனல் பறக்க விவாதம் நடந்த நிலையில் இன்று விஜய் பதிலுரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share