எடப்பாடி அணிக்கு திரும்பிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பில் இருந்த 5 எம்எல்ஏக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்தனர்.

ADVERTISEMENT

எஸ்.எம். சுகுமார் (ஆற்காடு தொகுதி)

ஹரி பாஸ்கர் (அந்தியூர் தொகுதி)

ADVERTISEMENT

திலீபன் ஜெய் சங்கர் (சங்கரன்கோவில் தொகுதி)

நடராஜன் (காங்கேயம் தொகுதி)

ADVERTISEMENT

மோகன் (பண்ருட்டி தொகுதி)

ஆகிய 5 சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களது ஆதரவை மீண்டும் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் சிவி சண்முகம் அணியில் இருந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய 3 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

“விஜய்க்கு ஆதரவளித்தது தவறு” – கூட்டாகப் பேட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த 5 எம்.எல்.ஏ-க்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில்:

“சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கட்சித் தலைமையின் முடிவை மீறித் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share