மரகதம் குமாரவேல் உள்ளிட்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா!

Published On:

| By Pandeeswari Gurusamy

bomb threat for aiadmk headquarters

மரகதம் குமாரவேல் உள்ளிட்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் எஸ்பி வேலுமணி தரப்பில் இணைந்து செயல்பட்டு வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து அவர்களிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.

ராஜினமா கடிதம் ஏற்கப்பட்டால் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் காலியாகும் இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ராஜினாமா கடிதத்தை வழங்கிய கையோடு மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்துள்ளனர். இந்நிலையில் மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share