தமிழ்நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மே 25-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதே போல டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூடி போராட்டம் நடத்தப்பட்டன. பொதுவாக டாஸ்மாக் மதுபான கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்படும்; ஆனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பகல் 1 மணிக்குப் பின்னரே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
