டிஜிட்டல் திண்ணை: திமுக துணை பொதுச் செயலாளர் பதவி கேட்கும் ஆளூர் ஷாநவாஸ்.. மற்றவர்கள்?

Published On:

| By Minnambalam Desk

Aloor Shanavas Seeks DMK Deputy General Secretary Post

வைஃபை ஆன் செய்ததும், “அதிகாரம் துரத்த.. அலைகின்ற கூட்டமே..
அரியணை தேடுது”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. எந்த கட்சியில பதவிக்கான போராட்டம்?

ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ ஜெயிக்காத கட்சியோ.. கட்சின்னு வந்துட்டாலே பதவிதானே ரொம்ப முக்கியம்.. அதை நோக்கிதானே எல்லா கால்களும் ஓடுது..

ADVERTISEMENT

வேறு கட்சிகளில் இருந்து திமுகவில (DMK) சேர்ந்தவங்க முக்கிய பொறுப்புகள் கேட்டு ‘அழுத்தம்’ தந்துகிட்டு இருக்காங்கன்னு தகவல் வந்தது..

சரின்னு அறிவாலய பக்கம் போய் சீனியர்ஸ்கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப, “ ஆமாங்க சார் உண்மைதான்.. ஏற்கனவே வேற கட்சிகளில் இருந்து வந்தவங்களுக்குதான் திமுகவில உடனுக்குடன் பதவிகள் கிடைக்குது.. ரொம்பவே முக்கியத்துவம் கிடைக்குதுன்னு ஏகப்பட்ட குமுறல் இருக்குது.. மா.செக்களாக இருக்கட்டும்.. மாநில நிர்வாகிகளாக இருக்கட்டும்.. ஏன் அமைச்சர்களாக இருந்தவங்களாகட்டும்.. வேற கட்சியில இருந்து வந்தவங்களுக்குதான் எல்லாம் கிடைக்குதுன்னு காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக கரை வேட்டிகட்டி இருக்கிறவங்க குமுறிகிட்டுதான் இருக்காங்க..

ADVERTISEMENT

இன்னொரு பக்கம், திமுகவை நம்பி வந்துட்டோம்ல.. எங்களுக்கு பதவி கொடுக்கலைன்னா எப்படின்னு ‘லாஜிக்’ பேசுறாங்க..

அதிமுகவில இருந்து ஓபிஎஸ் வந்தாரு.. அவரு முன்னாள் முதல்வர்.. கட்சியோட பொதுச்செயலாளர் ரேஞ்சுக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.. திமுகவில சேர்ந்து எம்.எல்.ஏ.வாகவும் ஆகிட்டாரு.. அவரு கட்சியில மாநில பொறுப்பு கேட்டுகிட்டுதான் இருக்கிறார்..

ADVERTISEMENT

அதே மாதிரி அதிமுக ஓபிஎஸ் அணியில இருந்த ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. இப்ப எம்.எல்.ஏ. தனக்கு தஞ்சாவூர் மா.செ. போஸ்ட் கேட்கிறாரு..

விசிகவில இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபுவும் தமக்கு மா.செ. பதவி கொடுங்கன்னு கேட்டுகிட்டு இருக்காரு..

திமுகவில சேருவதற்கு விசிக முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் (Aloor Shanavas) பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கிறார்.. அவரு, திமுகவோட மாநில நிர்வாகிகள் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை.. அதனால ‘எனக்கு துணை பொதுச்செயலாளர்’ பதவி கொடுங்கன்னு கேட்டு பேசிகிட்டு இருக்கிறார்..

இவங்க இல்லாம காங்கிரஸில் இருந்து வந்தவங்களும் இருக்காங்க.. மதிமுகவில இருந்து வர்றவங்களும் இருக்காங்க..எல்லாருமே கட்சியில பதவி கேட்கிறாங்க.. இவங்களோட ‘அழுத்தங்களை’ எப்படி டீல் செய்யறதுன்னு ஸ்டாலின் ஆலோசனை நடத்திகிட்டுதான் இருக்கார்”னு ஷேர் செய்யுறாங்க ப்ரோ என்றபடி டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃ லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share