டிஜிட்டல் திண்ணை: விசிகவுக்கு பனையூர் பாபு குட்பை.. ஸ்டாலினை சந்தித்த ஆளூர் ஷாநவாஸ்.. ராஜ்யசபா எம்.பி. பதவியா? பரபர தகவல்!

Published On:

| By Mathi

Digital Thinnai VCK Aloor Panaiyur Babu

வைஃபை ஆன் செய்ததும், “தத்தி தாவும் பேப்பர் நான்” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்ன ப்ரோ.. யாரு எங்க தாவப் போறாங்களாம்?

நான் அப்படி சொல்லலையே ப்ரோ.. ஆனா அந்த மாதிரி சம்பவங்கள் நடக்குதே..

ADVERTISEMENT

இன்னைக்கு விசிகவில இருந்து மாஜி எம்.எல்.ஏ. பனையூர் பாபு (Panaiyur Babu) விலகிட்டாரு.. அதே மாதிரி ஆளூர் ஷாநவாஸை (Aloor Shanavas) பத்தியும் பல தகவல்கள் பரவுது..

சட்டசபை தேர்தலில் விசிக ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காததால ஏகப்பட்ட சர்ச்சைகள்.. யூகங்கள்.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி விசிகவின் முதன்மை செயலாளர் பதவியை கொடுத்தாரு திருமா..

ADVERTISEMENT

எலக்‌ஷன் முடிஞ்ச பிறகு நடந்த அதிரி புதிரி முடிவுகளில்ல கூட ஆளூர் ஷாநவாஸ் முகம் தென்படலை.. இப்ப ரெண்டு நாளா ஆளூர் ஷாநவாஸ் திமுகவுக்கு போகப் போறாருன்னு தகவல் வைரலா பரவுது.. ஆளுநர் ஷாநவாஸ் பெயரில ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டும் வலம் வருது.. அது அவரோடது இல்லைன்னு விசிக பொருளாளர் பாலாஜிதான் சொல்றாரே தவிர இன்னமும் ஆளூர் ஷாநவாஸ் எதுவுமே சொல்லலை…

(படம்: கோப்பு)

ADVERTISEMENT

என்னதான் நடக்குதுன்னு விசாரிச்சப்ப, “மே 21-ந் தேதி நைட் ஸ்டாலினை (MK Stalin) ஆளுநர் ஷாநவாஸ் சந்திச்சு பேசுனாரு.. நைட் 7 மணியில இருந்து 7.45 மணி வரைக்கும் 45 நிமிஷம் இந்த சந்திப்பு நடந்துச்சு..

இந்த சந்திப்புல, “விஜய் ஆட்சிக்கு திருமா ஆதரவு தெரிவிச்சது.. அமைச்சரவையில சேர்ந்ததுன்னு எதுலயும் எனக்கு விருப்பமே இல்லை”ன்னு ஸ்டாலின்கிட்ட ஷாநவாஸ் ஷேர் செஞ்சாரு..

அதோட, “நான் திமுகவில சேர்ந்துடறேன்”ன்னும் ஷாநவாஸ் சொன்னாரு..

ஆனா ஸ்டாலினோ, “கொஞ்சம் பொறுமையா இருங்க.. இப்ப எதுவும் முடிவு எடுக்க வேண்டாம்”னு மட்டும் அட்வைஸ் செஞ்சு அனுப்பினார்”ன்னு சொல்றாங்க..

அப்ப ஆளூர் ஷாநவாஸ் என்ன செய்ய போறாராம்?

ஷாநவாஸ் விவகாரத்தை பத்தி விசிகவுல விசாரிச்சப்ப, “ஆதவ் அர்ஜூனாகிட்ட திருமா அமைச்சரவையில சேர்றதை பத்தி பேச்சுவார்த்தை நடத்துறப்பவே 2 வாரிய தலைவர் பதவி கேட்டாரு.. ஒன்னு சிந்தனை செல்வனுக்கு.. இன்னொன்னு எஸ்.எஸ். பாலாஜிக்கு..

அதே மாதிரி 1 ராஜ்யசபா சீட்டும் கேட்டாரு.. அந்த சீட், ஆளூர் ஷாநவாஸுக்குன்னு சொல்லிதான் திருமா பேச்சுவார்த்தை நடத்தினாரு”ன்னு சொல்றாங்க..

விசிகவுல புயல் அடிக்க போகுதுன்னு பலரும் சொன்னாலும் இப்பதான் மாஜி எம்.எல்.ஏ. பனையூர் பாபு, திருமா மேல பல குற்றச்சாட்டுகளை சொல்லி கட்சியை விட்டே விலகுறேன்னு அறிவிச்சிருக்காரு.. ஆனா மவுனமாகவே இருக்கிற ஷாநவாஸ் அடுத்து என்ன செய்ய போறாருன்னுதான் எல்லாருமே ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share