Fact Check: தமிழ்நாட்டில் பேருந்து மேற்கூரையில் அமர்ந்து பயணிகள் பயணமா?

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டில் பேருந்து மேற்கூரையில் அமர்ந்து பயணிகள் பயணம் என பரவுவது தவறான தகவல் என்று தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

பரவும் செய்தி

உத்தரபிரதேசம், பீகார், வங்காளதேசம் என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாடுதான் நல்ல மாற்றம் நன்றி என பேருந்து மேற்கூரையில் அமர்ந்து பயணிகள் பயணம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

ADVERTISEMENT

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அளித்துள்ள விளக்கத்தில், “குறிப்பிட்ட காணொலியில் இடம்பெற்றுள்ள KA 07 C 4297 என்ற பேருந்து, கர்நாடகா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம். கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வழியாக புதுச்சேரி வரை இயக்கும்படியான Interstate அனுமதி சீட்டு பெற்ற வாகனம். காணொலியில் உள்ள சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. பெங்களூருவில் உள்ள அத்திபள்ளி / அஸ்கூர் கேட் பகுதியில் நடந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முடிவு

இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Rating

False

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share