Fact Check: “நான் முதல்வன்” உதவித் தொகை நிறுத்தமா?

Published On:

| By Mathi

Fact Check Naan Mudhalvan

நான் முதல்வன் ( Naan Mudhalvan போட்டித் தேர்வு ) உதவித் தொகை திட்டத்தின் நிதியை தமிழ்நாடு அரசு நிறுத்தியதாக பரவும் தவறான தகவல் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பக்கம் விளக்கம் அளித்துள்ளது.

பரவும் செய்தி

நான் முதல்வன் ( போட்டித் தேர்வு ) உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இம்மாதம் வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், “பயனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தவகையில், ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்

முடிவு

இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

Rating

False

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share