Fact Check: அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தகவல் உண்மையா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Fact check

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் பாலிமர், நியூஸ் தமிழ் 24X7, தமிழ் ஜனம் சேனல்கள் நீக்கப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தி எனத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பகிரப்படும் தகவல்

தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

ADVERTISEMENT

உண்மை என்ன ?

இது தவறான செய்தியாகும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது.

ADVERTISEMENT

Fact Check:

சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.

முடிவு

இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

Rating

False

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share