Fact Check: L&T திட்டங்களின் விரிவாக்கத்தைப் புதிய திட்டங்கள் என தமிழக அரசு அறிவித்ததா? உண்மை என்ன?

Published On:

| By Mathi

Fact Check News

தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தான L&T விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்க்கம் விளக்கம் அளித்துள்ளது.

பகிரப்படும் தகவல்

நடைமுறையில் உள்ள இரண்டு L&T திட்டங்களின் விரிவாக்கத்தைப் புதிய திட்டங்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல். முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி முதலீட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்தின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.06.2026 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் தகவல் தரவு மையமும், திருவள்ளூர் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தளமும் விரிவாக்கத் திட்டங்கள் என்றே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை புதிய திட்டங்கள் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடவே இல்லை.

ADVERTISEMENT

Fact Check:

வெளியான செய்தி: நடைமுறையில் உள்ள இரண்டு L&T திட்டங்களின் விரிவாக்கத்தைப் புதிய திட்டங்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முடிவு

இது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

Rating

False

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share