விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் கவனத்திற்கு.. சிறப்பு பேருந்து குறித்த முழு விபரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Bus

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு நாளை (செப்டம்பர் 14) திங்கட்கிழமை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள், தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் இருந்து சொந்த ஊர்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு, கடந்த வெள்ளிக்கிழமை முதலே ஏராளமான பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து போக்குவரத்து துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11.09.2026 முதல் 12.09.2020 வரை சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் மூலமாக சுமார் 2,31,450 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தொடர் விடுமுறை முடிந்து 14.09.2026 மற்றும் 15.09.2026 ஆகிய நாட்களில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதனைக் கருத்தில் கொண்டு. பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 14.09.2026 அன்று 2,240 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி- 255, மதுரை&திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி, ஒசூர்&வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50, நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்-225, திருவண்ணாமலை-325, விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து பேருந்துகள் (திருச்சி-105, கிருஷ்ணகிரி, ஒசூர்&வேலூர்-200, 305) 15.09.2026 அன்று 1,325 சிறப்புப் சேலம்-75, மதுரை & திண்டுக்கல்-75, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10 கும்பகோணம்-125, நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, திருவண்ணாமலை-175, விழுப்புரம்-85, மற்றும் இதர ஊர்களிலிருந்து – 420) என கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அந்தந்த பேருந்து நிலையங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் பயணிகளின் வருகை மற்றும் தேவையை நேரடியாகக் கண்காணித்து, மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டி தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள். அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், (Trip) கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் (Trip) இயக்கப்பட்டு வருகின்றன.

இதனுடன் கூடுதலாக. 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும் (Trip), 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் (Trip) இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.
இரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இரயில் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் இரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள். தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல். சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share