டிஜிட்டல் திண்ணை: “OPERATION C”.. ஸ்டாலின், உதயநிதி பண்ணை வீட்டில் ஆலோசனை!

Published On:

| By Minnambalam Desk

Operation C: Stalin and Udhayanidhi Hold Secret Strategy Meeting at Farmhouse

வைஃபை ஆன் செய்ததும், “பழையதை மாற்றிப் புதியதைக் கட்டி
பாதை தெரியுது பார்!” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

வாங்க ப்ரோ.. யாரு எதை மாற்றப் போறாங்க?

சொல்றோம் ப்ரோ.. கேளுங்க.. திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதின்னு அவங்க குடும்பத்தினர் மட்டும் திருவள்ளூர் பக்கத்துல இருக்கிற பண்ணை வீட்டுக்கு போறாங்க.. இந்த பண்ணை வீட்டுல திமுக சம்பந்தமா பல முக்கியமான விஷயங்கள் டிஸ்கஷன் நடக்க இருக்குதாம் ப்ரோ..

ADVERTISEMENT

இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்க கிட்ட விசாரிச்சப்ப, “எலக்‌ஷன்ல திமுக தோத்தது பத்தி விரிவாக ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைச்சாங்க இல்லையா? அந்த குழுவில இருந்தவங்க எல்லாம் ரொம்பவே விரிவான ரிப்போர்ட்ஸ ஸ்டாலின் கிட்ட கொடுத்துட்டாங்க…

இந்த ரிப்போர்ட்ஸ் ரொம்ப விரிவாகத்தான் கொடுத்திருக்காங்க.. கட்சியோட அடிமட்ட தொண்டர்கள், சீனியர்கள், ஒதுங்கி இருக்கிறவங்கன்னு எல்லா தரப்புகிட்டேயும் கருத்துகளை வாங்கி இருக்காங்க..

ADVERTISEMENT

ஸ்டாலின், உதயநிதி, சபரீசன்.. அமைச்சர்களாக இருந்தவங்க.. எம்.எல்.ஏ.க்களாக இருந்தவங்க.. அவர்களோட குடும்பம், உறவினர்கள்.. அறிவாலயத்துல இருந்தவங்க.. திமுக ஆட்சியில கொடி கட்டிப் பறந்த ஐஏஎஸ் ஆபீசர்ஸ்.. அதாவது திமுக ஆட்சியில “பவர் சென்டர்களாக” இருந்த இவங்க எல்லாம் கட்சிக்காரர்களிடமும் அரசு நிர்வாகத்திலும் எப்படி எல்லாம் தலையிட்டாங்க.. இதனால என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படுத்துச்சு…

எலக்‌ஷன் ஒர்க்குல யாரெல்லாம் கட்சி வேட்பாளருக்கு எதிராக நடந்துகிட்டாங்க? வேட்பாளர்கள் யாரெல்லாம் தன்னிச்சையா நடந்துகிட்டாங்க? ஜெயிக்க கூடிய தொகுதிகளிலும் கூட தோத்தது ஏன்?ன்னு பலரும் ரொம்பவே மனம் திறந்து விரிவாக சொல்லி இருக்கிற விஷயங்களும் ரிப்போர்ட்ஸ்ல கொடுத்திருக்கிறோம்னு ஆய்வுக் குழுவில இருந்தவங்க சொல்றாங்க..

ADVERTISEMENT

ஆனா ஸ்டாலின் இதுவரைக்கும் இந்த ரிப்போர்ட்ஸை யாருக்குமே காட்டவும் இல்லை..டிஸ்கஷனும் செய்யலை..

அதனால இந்த ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் பண்ணை வீட்டுக்கு போய் படிச்சு பார்த்துட்டு உதயநிதியோட டிஸ்கஷன் செய்ய இருக்கிறார்.. இந்த ரிப்போர்ட்ஸ்ல இருக்கிற விஷயங்களை வெச்சு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்..

அதாவது கட்சி தொண்டர்கள் முதல் பல தரப்பினரும் அதிருப்தி தெரிவிக்க முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டவங்க மீது நடவடிக்கை எடுக்கலாமா? அப்படிங்கிறது பத்தியும் டிஸ்கஷன் செய்ய இருக்காங்க.. OPERATION CLEAN -ன்னு கூட இதை சொல்லலாம்”னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share