கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 2-வது பாகம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் டிடி ரிட்டர்ன்ஸ். பிரேம் ஆனந்த் எழுதி, இயக்கிய இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
காமெடி படமாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை எதுவும் வைக்கவில்லை. இந்த நிலையில் இன்று(ஜனவரி 27) நடைபெற்ற வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், டிடி ரிட்டர்ன்ஸ் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்தே இந்த பாகத்தையும் இயக்குகிறார். நடிகரும், சந்தானத்தின் நெருங்கிய நண்பருமான ஆர்யா இப்படத்தை தயாரிக்கிறார்.
விரைவில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் தில்லுக்கு துட்டு படத்தின் 3-வது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…