இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஜெகபதி பாபு உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கங்குவா படத்தின் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 27) பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு, கங்குவா படத்தில் அவர் நடித்திருக்கும் உதிரன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பாபி தியோலின் கெட்டப் செம்ம டெரராக உள்ளது.
Ruthless. Powerful. Unforgettable🗡️
Happy Birthday to our #Udhiran, #BobbyDeol sir✨ #Kanguva 🦅 #HBDBobbyDeol @thedeol@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @PenMovies @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/wMms4HzOqP
— Studio Green (@StudioGreen2) January 27, 2024
ஃபேண்டஸி கலந்த சரித்திர படமாக உருவாகும் கங்குவா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு கங்குவா படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தளபதி 7௦: லாக் செய்த பிரபல நிறுவனம்?
எம்பி தேர்தலில் இளைஞர் அணியினருக்கு வாய்ப்பு: உறுதி தந்த உதயநிதி