ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!

Published On:

| By Mathi

School Education

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். School Education

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்றபின் பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது எனவும், ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share