கவிஞர் ராஜசுந்தரராஜன் பெரும்பாலும் அரசியல் கருத்துகளை எழுதமாட்டார். தேமுதிக பிளவையொட்டி அவர் எழுதியிருந்த நிலைத்தகவலும், ட்விட்டர்களில் தொடர்ந்து தேமுதிக, வைகோ, சந்திரகுமார் என, மக்கள் நலக் கூட்டணி பற்றிய ட்விட்களே கண்ணில்படுகின்றன. அவற்றின் தொகுப்பும் கீழே.
// Raja Sundararajan
“இந்தமுறை விஜயகாந்தை செல்லாக்காசாக்கி விடுவார்கள், சென்றமுறை வைகோவை ஆக்கியது போலவே என்றேன்.
“ஆனால் கருணாநிதி விஜயகாந்த் கூட்டுக்காக ஏங்குகிறாரே?” (இந்தப் பேச்சு நடந்தது விஜயகாந்த் ம.ந.கூ.விற்கு போவதற்குமுன்பு)
“அவரைப்பற்றித் தெரியாதா? சும்மானாச்சுக்கும் போக்குக் காட்டுகிறார். அவர்க்கும் ஜெயலலிதாவிற்கும் சமநிலையில் வேண்டப்பட்ட தொழிலதிபர்களும் இடைப்பட்டிருப்பார்கள். வேடிக்கை பார்!” என்றேன்.
அதுதான் நடக்கிறது.
திருமா, பாவம், என்ன செய்வார்? வேறுபோக்கிடம் இல்லையே? //
// @thoatta
யாருக்கு யாரு எவ்வளவு கோடிங்கிறதெல்லாம் வைகோ தெளிவா சொல்றாரு, அப்ப கண்டிப்பா த்ரிஷா, நயன் சம்பளமெல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பாருல்ல //
// @nkchandar
“சந்திரகுமார் விலகியதால் தேமுதிகவுக்கு பாதிப்பில்லை” – வைகோ
அத உங்க ஓனர சொல்லச் சொல்லுங்கய்யா //
// @i_adaleru
சந்திரகுமார் போன்றவர்கள் தேமுதிக கட்சியைவிட்டுப் போனால்தான் கட்சியே உருப்படும்-வைகோ // இவரு ரொம்ப உருப்பட்டு கிழிச்சிட்டாரு!//

// @Piramachari
சரத்குமார் போகும்போது சர்பத் சாப்பிட்டுவிட்டு ,சந்திரகுமார் போகும்போது பொங்குபவர்களே நடுநிலையாளர்கள் எனப்படுவர் //
// @RoyalRamesh_007
யார் கூட்டணி சேர்ந்தாலும் சேராவிட்டாலும்
கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி
– சந்திரகுமார்
இது கலைஞரோட B டீமா இருக்குமோ? #WhyILikeDMK //
//@altappu
இப்படித்தான் இந்த சந்திரகுமார் ஹெல்த்மினிஸ்டர் ஆகனும் ஹெல்த்மினிஸ்டர் ஆகனும்னு சொல்லிட்டே இருப்பாரு. அப்புறம் கலைஞர் இதயத்துல இடம் கொடுத்து..//
//@kar2000k
“சந்திரகுமார் விலகியதால் தேமுதிகவுக்கு பாதிப்பில்லை” -தேமுதிக செய்தி தொடர்பாளர் வைகோ பேட்டி, தேமுதிகவில் வேலைக்கு சேர்ந்திருக்காரு//
/./@sivkarthic
தேமுதிக தனது கூட்டணி முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் -தமிழிசை
# வைதேகி காத்திருந்தாள் //
//@ansari_masthan
வாங்குன காசுக்கு வஞ்சனையில்லாமல் வேலைசெய்தார் வைகோ
#தேமுதிக-வை கலைச்சி உட்டாரா இல்லையா//
// @namtamilrerode
கிங்காகவும் ஆக முடியாமல் கிங் மேக்கராகவும் ஆக முடியாமல் கிங் பிஷரும் கையுமா கேப்டனை நடுத்தெருவில் நிறுத்தும் வரை வைகோ ஓயமாட்டார்.//
// @namtamilrerode
தேமுதிக அலுவலகத்திற்கு வைகோ போயி பத்து நாள்தான் ஆகுது கட்சி தெருவுக்கு வந்தி்ருச்சு.
செம ஆபத்தான ஆளுப்பா இந்த வைகோ
சொன்னா கேட்கனும்ல//
//@senthilcp 1h1 hour ago
புதுசா கட்சில சேர்றவங்க தேமுதிக-ல சேர்ந்து பின் திமுக-வுக்கோ அதிமுக-வுக்கோ கட்சி மாறிட்டா கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் போல //

/@Tamil_Typist
வைகோ-ன்னா ஏதாவது பேசிட்டே இருக்கணும்
ஜெ-ன்னா உலகமே இன்னிக்கு அழியப் போகுதுன்னாலும் பேசாம இருக்கணும்
மக்கள் பழகிட்டாங்க //
-லாக் ஆஃப்,”









