திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 5 தொகுதிகள்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

திமுக கூட்டணியில் இணைந்துள்ள முஸ்லீம் லீக்கிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன், முஸ்லீம் லீக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். “திமுக கூட்டணியில் 8 இடங்கள் கேட்டிருக்கிறோம். வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்திருக்கிறோம்.கருணாநிதியுடன் பேசி இறுதி முடிவு எட்டப்படும் என்று ஸ்டாலின் கூறினார்” என்று காதர் மொய்தீன் இன்று காலை தெரிவித்தார். இந்நிலையில், இன்று மாலை காதர் மொய்தீன் கருணாநிதியை சந்தித்தார். சந்திப்பிற்கு பின்னர், முஸ்லீம் லீக்கிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.முஸ்லீம் லீக் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்டது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel