ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் மார்கன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் உமேஷ் யாதம் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 18.2 ஓவரில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி எளிதில் வென்றது. கவுதம் கம்பீர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல்: கம்பீர் அசத்தல் – கொல்கத்தா எளிய வெற்றி
By Balaji
|
Published on 17 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








