இருவர் சாவுக்கு ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும் – ராமதாஸ்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

yஜெயலலிதாவின் விருத்தாசலம் பரப்புரையில் நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தும், மேலும் ஏழு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலும் உள்ளனர். இந்த வேதனையானச் சம்பவத்தை ஒட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

‘ஜெயலலிதாவின் வசதிக்காக பிற்பகல் 3.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்துவதும், அதற்காகப் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்களை விலங்குகளைப்போல பொதுக்கூட்டம் நடக்கும் திடலில் அடைத்துவைப்பதும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் ஆகும். ஜெயலலிதா ஆட்சியிலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மனித உரிமைகள் மீறப்படுவது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அந்தச் செய்தி ஜெயலலிதாவுக்குத் தெரிந்தால் அபசகுனமாகி விடும் என்பதால், ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்துவிட்டு புறப்படும்வரை அவருக்கு சிகிச்சை தராமல் தாமதித்தனர். இதனால், அவர் உயிரிழந்தார். அதேபோன்ற நிகழ்வுதான் இப்போதும் அரங்கேறி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சாவுக்கு ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்.

ADVERTISEMENT

இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel