ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்ப்போம் – இல.கணேசன்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக-வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், ‘பாஜக-வால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும். அனைத்துதரப்பு மக்களின் பிரச்னைக்களுக்காகவும் பாஜக குரல் கொடுத்து வருகிறது. மக்களைவைத் தேர்தலைப் போலவே தற்போது சட்டபேரவைத் தேர்தலிலும் கட்சிக்கான ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் நலக் கூட்டணி வலுவான கூட்டணி இல்லை. வாக்கு சதவிகிதத்தை அதிகரித்து அங்கீகாரத்தை தக்க வைப்பதற்கு மக்கள் நலக் கூட்டணி முயற்சி செய்து வருகிறது. விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது கேலிக்குரியச் செயலாகும். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திறமையான வேட்பாளரை பாஜக நிறுத்தும். மீனவர்கள், கடல் சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்’ எனக் கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel