அழைப்பு வந்தது -அதிமுகவுக்கு ஆதரவு- சரத்குமார்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.கடந்த 2011-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 5 ஆண்டுகளும் ஆளும் அதிமுக-வின் ஆதரவாளராகவே செயல்பட்டுவந்தார் சரத்குமார்.ஆனால் இப்போது கூட்டணிக்காக அதிமுகவில் இருந்து அழைப்பு வராத நிலையில் ”அதிமுக தங்களை கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தி விட்டு வீசிவிட்டதாக”க் அதிமுக மீது குற்றம் கூறி அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், பாஜக கூட்டணியில் இணைந்தார் இந்நிலையில், இன்று திடீர் திருப்பமாக அதிமுக பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார். அந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சரத்குமார், ‘‘ஜெயலலிதாவுடனான சந்திப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக-வுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்ததால், இடையில் அதிமுக-வுடன் பிரிவு ஏற்பட்டது’’ என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel