அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தற்போது நேர்காணல் நடைபெற்று வருகிறது.ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மூன்று நபர்களை மட்டுமே தேர்வு செய்து நேர்காணல் நடத்துகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.நாளை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாபிரெட்டிப்பட்டி தொகுதியில் இருந்து ராஜேந்திரன்,கௌதமன் மற்றும் குப்புசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிமுக எம்.பியும், மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை மூலமாக பென்னாகரம் தொகுதிக்கு ஆறுமுகம் மற்றும் ஒ.செ.சுப்பிரமணியம் ஆகியோருக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்திருக்கிறது.இருவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நேர்காணல் அழைப்பைப் பார்த்ததிலிருந்து இருவருக்கும் தீவிர பக்தி ஏற்பட்டிருக்கிறது.கோவில் கோவிலாக சென்று வருகிறார்கள் என்று தகவல்.அரூர் தற்போது தனித்தொகுதியாக இருக்கிறது.இந்த தொகுதிக்கு ஒ.செ.முருகன் மற்றும் கண்ணகிக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கண்ணகி தானிய வியாபாரம் செய்து வருகிறார்.பெண்கள் இட ஒதுக்கீட்டில் இவருக்கு இடம் கிடைத்துவிடுமோ என்று முருகன் பயத்தில் இருக்கிறார்.
மாவட்டத்தில் உள்ள ஜாதி ஓட்டுக்கள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே,அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய சாதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.இந்த மூன்று தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர் தம்பிதுரைதான்.









