ஃபேஸ்புக் லைக்குகளை வைத்து ஒன்றும் செய்யமுடியாது என, நம்மில் பலர் அலுத்துக் கொள்வதுண்டு. வருகிற 2017ம் ஆண்டு, உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முக்கியத் தகுதியாக ஃபேஸ்புக் லைக்குகள் உருவெடுத்துள்ளது. ஃபேஸ்புக்கில் குறைந்தது 25000 பின்தொடர்பவர்கள் அல்லது லைக்குகளைப் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே 2017 உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் வழங்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் மட்டும் இல்லாமல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.இதனால் எப்படி லைக்கை அள்ளுவது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் உபி பாஜாகவினர்.
ஃபேஸ்புக் லைக் அதிகமிருந்தால்தான் சீட்!: பாஜக
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








