ADVERTISEMENT

ரயில்வே டிராக்கில் கூலாக கார் ஓட்டிய பெண்… பொதுமக்கள் ஷாக்!

Published On:

| By Selvam

women drive car in railway track

தெலங்கானா மாநிலம் சங்கர்பள்ளி ரயில்வே டிராக்கில் பெண் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபரீத செயலில் ஈடுபட்ட 38 வயதான வாமிகா சோனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, சங்கர்பள்ளி காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கவுட் கூறும்போது, “உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வாமிகா சோனி. தற்போது சங்கர்பள்ளியில் வசித்து வருகிறார். women drive car in railway track

ADVERTISEMENT

இவர் கேப்ஜெமினி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது வேலையை இழந்தார். இதனால் உளவில் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் சொல்கிறார்கள்.

இந்தநிலையில், வாமிகா இன்று (ஜூன் 26) சங்கர்பள்ளி ரயில்வே டிராக்கில் வேகமாக கார் ஓட்டியிருக்கிறார். இதனைக் கண்ட ரயில்வே அதிகாரிகள், அவரது காரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது காவல் அதிகாரிகளை வாமிகா தாக்கியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அங்கிருந்த பொதுமக்கள் மீதும் கற்களை வீசியுள்ளார். உடனடியாக ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்” என்றார்.

ரயில்வே டிராக்கில் கார் ஓட்டியதால் சங்கர்பள்ளி – ஹைதராபாத் இடையேயான ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. women drive car in railway track

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share