தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் குறித்து நமது மின்னம்பலம் மீடியா தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரத்தை துல்லியமாக நாம் வெளியிட்டு வருகிறோம்.
மின்னம்பலம் மீடியா இந்த சர்வேவை எப்படி மேற்கொண்டது?
- இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- SIR ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியின் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது.
- 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம்- அதாவது SIR- க்கு முன்னர் தமிழக வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 6.41 கோடி.
- SIR- மேற்கொள்ளப்பட்டதால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 97.30 லட்சம் பேர்.
- SIR-க்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அத்துடன் தேர்தல் ஆணையம்
வயது வாரியாக
18 – 29
30 – 39
40 – 49
50 – 59
60 – 69
70 – 79 வயது உள்ள வாக்காளர்கள் விவரங்களை வெளியிட்டிருந்தது. இந்த தரவுகளை நாம் எடுத்துக் கொண்டோம்.
அடுத்ததாக ஜாதி அடிப்படையிலானது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் தேர்வில் ஜாதி முக்கிய காரணியாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் வெளிப்படையாக ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவிப்பது இல்லை. ஆனால் அதைத்தான் நடைமுறையில் பின்பற்றுகின்றன.
நாம் கடந்த 5 சட்டசபை தேர்தல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதி வாக்குகள் அதிகமாக உள்ளது? நிறுத்தப்பட்ட வேட்பாளர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? வெற்றி பெற்ற வேட்பாளர் எந்த ஜாதியை சேர்ந்தவர்? என ஆய்வு செய்தோம்.
ஆகையால் நமது கருத்து கணிப்புக்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் இருக்கக் கூடிய ஜாதிகள் குறித்த புள்ளி விவரம். அரசு ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து எடுக்கப்பட்டன.
ஒரு சட்டசபை தொகுதியில் அதிக எண்ணிக்கையில் தொடங்கி குறைவான எண்ணிக்கையிலான வரை ஜாதி அடிப்படையிலான வாக்காளர் எண்ணிக்கை விவரங்களையும் நாம் எடுத்துக் கொண்டோம். ஊடகங்களில் முதல் முறையாக இத்தகைய ஒரு தரவை ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக பட்டியலிட்டு வெளியிட்டிருப்பதும் நமது மின்னம்பலம் ஊடகம்தான்.
இந்த தரவுகளை வைத்து நாம் எப்படி சர்வே எடுத்தோம்?
- அந்தந்த வயதினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்வே சாம்பிள் எடுக்கப்பட்டது.
- அதேபோல ஒவ்வொரு ஜாதியில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப சர்வே சாம்பிள் எடுக்கப்பட்டது.
- உதாரணமாக தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம்கள் 7.5 சதவீதம் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன. அதே நேரத்தில் 30 சட்டசபை தொகுதிகளில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இந்த சதவீதத்துக்கு ஏற்ப அந்த தொகுதிகளில் நாம் சர்வே சாம்பிள்களை அதிகப்படுத்தி இருக்கிறோம்.
- இதே போல தமிழ்நாட்டு வாக்காளர்களில் 52 சதவீதம் பேர் பெண்கள். அதாவது 2 கோடியே 77 லட்சத்து 66 ஆயிரத்து 332 பேர் பெண் வாக்காளர்கள்.
- ஆண்கள் 48 சதவீதம் பேர்.. 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் ஆண் வாக்காளர்கள்.
- ஆகையால் பெண்களின் வாக்குகளை மிகவும் கவனமுடனும் உரிய விகிதத்துடனும் நாம் பதிவு செய்து கொண்டோம். இருந்த போதும் பெண்களிடம் சரியான விகிதத்துடன் வாக்கெடுப்பு நடத்துவதில் சிரமங்கள் இருந்தன.
இப்படித்தான் மின்னம்பலம் மீடியாவின் சர்வே மிக நுட்பமாகவும் துல்லியமானதாகவும் எடுக்கப்பட்டது. கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
மின்னம்பலத்தின் கருத்து கணிப்பு முடிவுகள்




தவெக (TVK) 1 தொகுதி: 16.64%
நாதக (NTK) 0 தொகுதி: 7.05%
சமநிலை / இழுபறி 1 தொகுதி
- திமுக- அதிமுக இடையேயான வாக்கு சதவீதம் என்பது 5 சதவீதம் மட்டும்.
- 2021 தேர்தலில் திமுக கூட்டணி 45.38 சதவீதம் வாக்குகளையும் அதிமுக- பாஜக கூட்டணி 39.72 சதவீதம் வாக்குகளையும் வாங்கியது. அந்த தேர்தலில் இரு கட்சிகளிடையே 5.66 வாக்கு சதவீதம் இருந்தது. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டணி வாரியாக கட்சிகளின் வெற்றி மற்றும் சராசரி வாக்கு சதவீதம்
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள சராசரி வாக்கு (%) என்பது, அந்த குறிப்பிட்ட கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமே பெற்ற வாக்குகளின் சராசரியாகும். (உதாரணமாக: காங்கிரஸ் கட்சியின் சராசரி வாக்கு சதவீதம், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளை, அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து கணக்கிடப்பட்டது).
திமுக கூட்டணி
| கட்சி | வெல்லும் தொகுதிகள் | சராசரி வாக்கு (%) |
|---|---|---|
| திமுக | 123 | 40.26% |
| காங்கிரஸ் | 20 | 39.93% |
| தேமுதிக | 6 | 38.4% |
| விசிக | 6 | 39.62% |
| சிபிஐ(ம) | 4 | 41.4% |
| இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | 2 | 40.5% |
| மதிமுக | 2 | 40.5% |
தவெக (TVK)
| கட்சி | வெல்லும் தொகுதிகள் | சராசரி வாக்கு (%) |
|---|---|---|
| தவெக | 1 | 16.64% |
நாடாளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற முடிவுகள்
| நாடாளுமன்ற தொகுதி | திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | தவெக (TVK) | சமநிலை |
|---|---|---|---|---|
| அரக்கோணம் | 4 | 2 | 0 | – |
| ஆரணி | 2 | 4 | 0 | – |
| ஈரோடு | 5 | 1 | 0 | – |
| கடலூர் | 6 | 0 | 0 | – |
| கன்னியாகுமரி | 5 | 1 | 0 | – |
| கரூர் | 4 | 2 | 0 | – |
| கள்ளக்குறிச்சி | 5 | 1 | 0 | – |
| காஞ்சிபுரம் | 5 | 1 | 0 | – |
| கிருஷ்ணகிரி | 3 | 3 | 0 | – |
| கோயம்புத்தூர் | 3 | 3 | 0 | – |
| சிதம்பரம் | 3 | 3 | 0 | – |
| சிவகங்கை | 5 | 1 | 0 | – |
| சென்னை வடக்கு | 4 | 1 | 1 | – |
| சேலம் | 4 | 2 | 0 | – |
| தஞ்சாவூர் | 6 | 0 | 0 | – |
| தர்மபுரி | 1 | 5 | 0 | – |
| திண்டுக்கல் | 5 | 1 | 0 | – |
| திருச்சிராப்பள்ளி | 6 | 0 | 0 | – |
| திருநெல்வேலி | 5 | 1 | 0 | – |
| திருப்பூர் | 3 | 3 | 0 | – |
| திருவண்ணாமலை | 4 | 2 | 0 | – |
| திருவள்ளூர் | 6 | 0 | 0 | – |
| தூத்துக்குடி | 5 | 1 | 0 | – |
| தென்காசி | 4 | 2 | 0 | – |
| தென்சென்னை | 3 | 2 | 0 | 1 |
| தேனி | 3 | 3 | 0 | – |
| நாகப்பட்டினம் | 4 | 2 | 0 | – |
| நாமக்கல் | 3 | 3 | 0 | – |
| நீலகிரி | 4 | 2 | 0 | – |
| பெரம்பலூர் | 6 | 0 | 0 | – |
| பொள்ளாச்சி | 2 | 4 | 0 | – |
| மதுரை | 3 | 3 | 0 | – |
| மத்திய சென்னை | 6 | 0 | 0 | – |
| மயிலாடுதுறை | 6 | 0 | 0 | – |
| ராமநாதபுரம் | 6 | 0 | 0 | – |
| விருதுநகர் | 3 | 3 | 0 | – |
| விழுப்புரம் | 4 | 2 | 0 | – |
| வேலூர் | 5 | 1 | 0 | – |
| ஸ்ரீபெரும்புதூர் | 6 | 0 | 0 | – |
சட்டமன்ற தொகுதி வாரியான விரிவான முடிவுகள் (முன்னிலை விகிதத்துடன்)
திமுக கூட்டணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 172 | பாபநாசம் / Papanasam | 7% |
| 47 | வாணியம்பாடி / Vaniyambadi | 4% |
காங்கிரஸ் (20 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 183 | அறந்தாங்கி / Aranthangi | 14% |
| 216 | ஸ்ரீவைகுண்டம் / Srivaikuntam | 14% |
| 2 | பொன்னேரி (தனி) / Ponneri (SC) | 12% |
| 98 | ஈரோடு கிழக்கு / Erode (East) | 12% |
| 231 | குளச்சல் / Colachel | 12% |
| 233 | விளவங்கோடு / Vilavancode | 12% |
| 234 | கிள்ளியூர் / Killiyoor | 12% |
| 146 | துறையூர் (தனி) / Thuraiyur (SC) | 11% |
| 197 | உசிலம்பட்டி / Usilampatti | 11% |
| 227 | நாங்குநேரி / Nanguneri | 10% |
| 210 | திருவாடானை / Tiruvadanai | 9% |
| 29 | ஸ்ரீபெரும்புதூர் / Sriperumbudur (SC) | 8% |
| 108 | உதகமண்டலம் / Udhagamandalam | 8% |
| 161 | மயிலாடுதுறை / Mayiladuthurai | 7% |
| 184 | காரைக்குடி / Karaikudi | 5% |
| 155 | கடலூர் / Cuddalore | 4% |
| 39 | சோளிங்கர் / Sholingur | 3% |
| 121 | சிங்காநல்லூர் / Singanallur | 3% |
| 53 | கிருஷ்ணகிரி / Krishnagiri | 1% |
| 219 | சங்கரன்கோவில் (தனி) / Sankarankovil (SC) | 1% |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 96 | திருச்செங்கோடு / Tiruchengode | 3% |
சிபிஐ (2 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 166 | திருத்துறைபூண்டி (தனி) / Thiruthuraipoondi (SC) | 12% |
| 107 | பவானிசாகர் (தனி) / Bhavanisagar (SC) | 2% |
சிபிஐ(ம) (4 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 178 | கந்தர்வகோட்டை (தனி) / Gandharvakottai (SC) | 15% |
| 232 | பத்மநாபபுரம் / Padmanabhapuram | 15% |
| 127 | பழனி / Palani | 9% |
| 164 | கீழ்வேளூர் (தனி) / Kilvelur (SC) | 7% |
திமுக (123 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 13 | கொளத்தூர் / Kolathur | 30% |
| 19 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி / Chepauk-Triplicane | 25% |
| 226 | பாளையங்கோட்டை / Palayamkottai | 24% |
| 63 | திருவண்ணாமலை / Tiruvannamalai | 23% |
| 5 | பூந்தமல்லி (தனி) / Poonamallee (SC) | 20% |
| 16 | எழும்பூர் (தனி) / Egmore (SC) | 20% |
| 129 | ஆத்தூர் / Athoor | 20% |
| 140 | திருச்சிராப்பள்ளி (மேற்கு) / Tiruchirappalli (West) | 20% |
| 9 | மாதவரம் / Madhavaram | 19% |
| 128 | ஒட்டன்சத்திரம் / Oddanchatram | 19% |
| 208 | திருச்சுழி / Tiruchuli | 18% |
| 18 | துறைமுகம் / Harbour | 17% |
| 142 | திருவெறும்பூர் / Thiruverumbur | 17% |
| 6 | ஆவடி / Avadi | 16% |
| 168 | திருவாரூர் / Thiruvarur | 16% |
| 175 | ஒரத்தநாடு / Orathanadu | 16% |
| 4 | திருவள்ளூர் / Tiruvallur | 15% |
| 14 | வில்லிவாக்கம் / Villivakkam | 15% |
| 78 | ரிஷிவந்தியம் / Rishivandiyam | 15% |
| 99 | ஈரோடு மேற்கு / Erode (West) | 15% |
| 134 | அரவக்குறிச்சி / Aravakurichi | 15% |
| 147 | பெரம்பலூர் (தனி) / Perambalur (SC) | 15% |
| 215 | திருச்செந்தூர் / Tiruchendur | 15% |
| 1 | கும்மிடிப்பூண்டி / Gummidipoondi | 14% |
| 23 | சைதாப்பேட்டை / Saidapet | 14% |
| 28 | ஆலந்தூர் / Alandur | 14% |
| 144 | மணச்சநல்லூர் / Manachanallur | 14% |
| 173 | திருவையாறு / Thiruvaiyaru | 14% |
| 214 | தூத்துக்குடி / Thoothukudi | 14% |
| 126 | மடத்துக்குளம் / Madathukulam | 13% |
| 171 | கும்பகோணம் / Kumbakonam | 13% |
| 20 | ஆயிரம் விளக்கு / Thousand Lights | 12% |
| 89 | சேலம் வடக்கு / Salem (North) | 12% |
| 145 | முசிறி / Musiri | 12% |
| 148 | குன்னம் / Kunnam | 12% |
| 174 | தஞ்சாவூர் / Thanjavur | 12% |
| 211 | ராமநாதபுரம் / Ramanathapuram | 12% |
| 217 | ஒட்டப்பிடாரம் (தனி) / Ottapidaram (SC) | 12% |
| 41 | ராணிப்பேட்டை / Ranipet | 11% |
| 109 | கூடலூர் (தனி) / Gudalur (SC) | 11% |
| 137 | குளித்தலை / Kulithalai | 11% |
| 167 | மன்னார்குடி / Mannargudi | 11% |
| 180 | புதுக்கோட்டை / Pudukottai | 11% |
| 7 | மதுரவாயல் / Maduravoyal | 10% |
| 32 | செங்கல்பட்டு / Chengalpattu | 10% |
| 50 | திருப்பத்தூர் / Tirupattur | 10% |
| 8 | அம்பத்தூர் / Ambattur | 9% |
| 21 | அண்ணா நகர் / Anna Nagar | 9% |
| 40 | காட்பாடி / Katpadi | 9% |
| 48 | ஆம்பூர் / Ambur | 9% |
| 151 | திட்டக்குடி / Tittakudi (SC) | 9% |
| 201 | கம்பம் / Cumbum | 9% |
| 207 | அருப்புக்கோட்டை / Aruppukottai | 9% |
| 17 | ராயபுரம் / Royapuram | 8% |
| 91 | வீரபாண்டி / Veerapandi | 8% |
| 130 | நிலக்கோட்டை / Nilakkottai (SC) | 8% |
| 156 | குறிஞ்சிப்பாடி / Kurinjipadi | 8% |
| 182 | ஆலங்குடி / Alangudi | 8% |
| 189 | மதுரை (கிழக்கு) / Madurai (East) | 8% |
| 212 | முதுகுளத்தூர் / Mudukulathur | 8% |
| 31 | தாம்பரம் / Tambaram | 7% |
| 44 | அணைக்கட்டு / Anaikattu | 7% |
| 90 | சேலம் தெற்கு / Salem (South) | 7% |
| 102 | காங்கேயம் / Kangeyam | 7% |
| 136 | கிருஷ்ணராயபுரம் (தனி) / Krishnarayapuram (SC) | 7% |
| 213 | விளாத்திகுளம் / Vilathikulam | 7% |
| 22 | விருகம்பாக்கம் / Virugambakkam | 6% |
| 55 | ஓசூர் / Hosur | 6% |
| 106 | கோபிசெட்டிபாளையம் / Gobichettipalayam | 6% |
| 110 | குன்னூர் / Coonoor | 6% |
| 133 | வேடசந்தூர் / Vedasandur | 6% |
| 141 | திருச்சிராப்பள்ளி (கிழக்கு) / Tiruchirappalli (East) | 6% |
| 143 | லால்குடி / Lalgudi | 6% |
| 193 | மதுரை (மையம்) / Madurai (Central) | 6% |
| 200 | போடிநாயக்கனூர் / Bodinayakanur | 6% |
| 15 | திரு.வி.க. நகர் (தனி) / Thiru-Vi-Ka Nagar (SC) | 5% |
| 43 | வேலூர் / Vellore | 5% |
| 74 | விழுப்புரம் / Villupuram | 5% |
| 79 | சங்கராபுரம் / Sankarapuram | 5% |
| 139 | ஸ்ரீரங்கம் / Srirangam | 5% |
| 162 | பூம்புகார் / Poompuhar | 5% |
| 176 | பட்டுக்கோட்டை / Pattukkottai | 5% |
| 185 | திருப்பத்தூர் / Tirupattur | 5% |
| 191 | மதுரை (வடக்கு) / Madurai (North) | 5% |
| 202 | ராஜபாளையம் / Rajapalayam | 5% |
| 11 | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் / Dr. Radhakrishnan Nagar | 4% |
| 27 | சோழிங்கநல்லூர் / Sholinganallur | 4% |
| 37 | காஞ்சிபுரம் / Kancheepuram | 4% |
| 62 | செங்கம் (தனி) / Chengam (SC) | 4% |
| 69 | வந்தவாசி / Vandavasi | 4% |
| 94 | நாமக்கல் / Namakkal | 4% |
| 101 | தாராபுரம் (தனி) / Dharapuram (SC) | 4% |
| 122 | கிணத்துக்கடவு / Kinathukadavu | 4% |
| 153 | நெய்வேலி / Neyveli | 4% |
| 170 | திருவிடைமருதூர் (தனி) / Thiruvidaimarudur (SC) | 4% |
| 220 | வாசுதேவநல்லூர் (தனி) / Vasudevanallur (SC) | 4% |
| 224 | திருநெல்வேலி / Tirunelveli | 4% |
| 228 | ராதாபுரம் / Radhapuram | 4% |
| 36 | உத்திரமேரூர் / Uthiramerur | 3% |
| 52 | பர்கூர் / Bargur | 3% |
| 75 | விக்கிரவாண்டி / Vikravandi | 3% |
| 76 | திருக்கோயிலூர் / Tirukkoyilur | 3% |
| 114 | திருப்பூர் (தெற்கு) / Tiruppur (South) | 3% |
| 120 | கோயம்புத்தூர் தெற்கு / Coimbatore (South) | 3% |
| 135 | கரூர் / Karur | 3% |
| 177 | பேராவூரணி / Peravurani | 3% |
| 187 | மானாமதுரை / Manamadurai (SC) | 3% |
| 204 | சாத்தூர் / Sattur | 3% |
| 209 | பரமக்குடி(தனி) / Paramakudi (SC) | 3% |
| 222 | தென்காசி / Tenkasi | 3% |
| 223 | ஆலங்குளம் / Alangulam | 3% |
| 42 | ஆற்காடு / Arcot | 2% |
| 64 | கீழ்பெண்ணாத்தூர் / Kilpennathur | 2% |
| 81 | கெங்கவல்லி / Gangavalli | 2% |
| 103 | பெருந்துறை / Perundurai | 2% |
| 118 | கோயம்புத்தூர் வடக்கு / Coimbatore (North) | 2% |
| 132 | திண்டுக்கல் / Dindigul | 2% |
| 157 | புவனகிரி / Bhuvanagiri | 2% |
| 181 | திருமயம் / Thirumayam | 2% |
| 61 | அரூர் (தனி) / Harur (SC) | 1% |
| 83 | ஏற்காடு / Yercaud (SC) | 1% |
| 92 | ராசிபுரம் (தனி) / Rasipuram (SC) | 1% |
| 230 | நாகர்கோவில் / Nagercoil | 1% |
தேமுதிக (6 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 30 | பல்லாவரம் / Pallavaram | 11% |
| 152 | விருத்தாசலம் / Vriddhachalam | 6% |
| 206 | விருதுநகர் / Virudhunagar | 6% |
| 46 | குடியாத்தம் / Gudiyatham (SC) | 3% |
| 66 | போளூர் / Polur | 3% |
| 88 | சேலம் மேற்கு / Salem (West) | 3% |
மதிமுக (2 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 100 | மொடக்குறிச்சி / Modakkurichi | 12% |
| 160 | சீர்காழி (தனி) / Sirkazhi (SC) | 6% |
மனிதநேய மக்கள் கட்சி (1 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 163 | நாகப்பட்டினம் / Nagapattinam | 5% |
விசிக (6 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 159 | கட்டுமன்னார்கோயில் (தனி) / Kattumannarkoil (SC) | 10% |
| 72 | திண்டிவனம் (தனி) / Tindivanam (SC) | 8% |
| 34 | செய்யூர் (தனி) / Cheyyur (SC) | 4% |
| 80 | கள்ளக்குறிச்சி / Kallakurichi (SC) | 4% |
| 33 | திருப்போரூர் / Thiruporur | 2% |
| 154 | பண்ருட்டி / Panruti | 2% |
அதிமுக கூட்டணி (NDA)
அதிமுக (56 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 111 | மேட்டுப்பாளையம் / Mettupalayam | 14% |
| 86 | எடப்பாடி / Edappadi | 11% |
| 119 | தொண்டாமுத்தூர் / Thondamuthur | 11% |
| 179 | விராலிமலை / Viralimalai | 11% |
| 60 | பாப்பிரெட்டிபட்டி / Pappireddippatti | 10% |
| 71 | மயிலம் / Mailam | 7% |
| 97 | குமாரபாளையம் / Kumarapalayam | 7% |
| 49 | ஜோலார்பேட்டை / Jolarpet | 6% |
| 54 | வேப்பனஹள்ளி / Veppanahalli | 6% |
| 123 | பொள்ளாச்சி / Pollachi | 6% |
| 196 | திருமங்கலம் / Thirumangalam | 6% |
| 3 | திருத்தணி / Tiruttani | 5% |
| 24 | தியாகராய நகர் / T. Nagar | 5% |
| 38 | அரக்கோணம் / Arakkonam (SC) | 5% |
| 57 | பாலக்கோடு / Palacode | 5% |
| 125 | உடுமலைப்பேட்டை / Udumalpet | 5% |
| 188 | மேலூர் / Melur | 5% |
| 218 | கோவில்பட்டி / Kovilpatti | 5% |
| 77 | உளுந்தூர்பேட்டை / Ulundurpet | 4% |
| 87 | சங்ககிரி / Sangakari | 4% |
| 113 | திருப்பூர் (வடக்கு) / Tiruppur (North) | 4% |
| 117 | கவுண்டம்பாளையம் / Kavundampalayam | 4% |
| 165 | வேதாரண்யம் / Vedaranyam | 4% |
| 194 | மதுரை (மேற்கு) / Madurai (West) | 4% |
| 195 | திருப்பரங்குன்றம் / Thiruparankundram | 4% |
| 203 | ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) / Srivilliputhur (SC) | 4% |
| 51 | ஊத்தங்கரை (தனி) / Uthangarai (SC) | 3% |
| 65 | கலசபாக்கம் / Kalasaipakkam | 3% |
| 82 | ஆத்தூர் (சேலம்) / Attur (Salem) | 3% |
| 104 | பவானி / Bhavani | 3% |
| 116 | சூலூர் / Sulur | 3% |
| 138 | மணப்பாறை / Manapparai | 3% |
| 149 | அரியலூர் / Ariyalur | 3% |
| 169 | நன்னிலம் / Nannilam | 3% |
| 190 | சோழவந்தான் (தனி) / Sholavandan (SC) | 3% |
| 198 | ஆண்டிபட்டி / Andipatti | 3% |
| 225 | அம்பாசமுத்திரம் / Ambasamudram | 3% |
| 10 | திருவொற்றியூர் / Tiruvottiyur | 2% |
| 67 | ஆரணி / Arani | 2% |
| 68 | செய்யாறு / Cheyyar | 2% |
| 73 | வானூர் (தனி) / Vanur (SC) | 2% |
| 84 | ஓமலூர் / Omalur | 2% |
| 85 | மேட்டூர் / Mettur | 2% |
| 93 | சேந்தமங்கலம் (தனி) / Senthamangalam (SC) | 2% |
| 95 | பரமத்தி வேலூர் / Paramathi Velur | 2% |
| 124 | வால்பாறை (தனி) / Valparai (SC) | 2% |
| 131 | நத்தம் / Natham | 2% |
| 158 | சிதம்பரம் (தனி) / Chidambaram (SC) | 2% |
| 205 | சிவகாசி / Sivakasi | 2% |
| 26 | வேளச்சேரி / Velachery | 1% |
| 35 | மதுராந்தகம் (தனி) / Maduranthakam (SC) | 1% |
| 105 | அந்தியூர் / Anthiyur | 1% |
| 115 | பல்லடம் / Palladam | 1% |
| 186 | சிவகங்கை / Sivaganga | 1% |
| 221 | கடையநல்லூர் / Kadayanallur | 1% |
| 229 | கன்னியாகுமரி / Kanniyakumari | 1% |
அமமுக (1 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 199 | பெரியகுளம் (தனி) / Periyakulam (SC) | 4% |
பாஜக (3 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 112 | அவினாசி (தனி) / Avanashi (SC) | 4% |
| 192 | மதுரை (தெற்கு) / Madurai (South) | 3% |
| 56 | தளி / Thalli | 2% |
பாமக (4 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 59 | தர்மபுரி / Dharmapuri | 12% |
| 58 | பென்னாகரம் / Pennagaram | 10% |
| 150 | ஜெயங்கொண்டம் / Jayankondam | 2% |
| 70 | செஞ்சி / Gingee | 1% |
புரட்சி பாரதம் கட்சி (1 தொகுதிகள்)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 45 | கீழ்வைத்தீனன்குப்பம் / Kilvaithinankuppam (SC) | 1% |
தவெக (TVK)
தவெக (1 தொகுதி)
| எண் | தொகுதி | முன்னிலை (%) |
|---|---|---|
| 12 | பெரம்பூர் / Perambur | 4% |
சமநிலை / இழுபறி (1 தொகுதிகள்)
| எண் | தொகுதி |
|---|---|
| 25 | மயிலாப்பூர் / Mylapore |
சர்வே முடிவுகள் அடிப்படையில்











முதல்வர் வேட்பாளர்- யாருக்கு ஆதரவு?
நமது கருத்து கணிப்பில்
முதல்வர் வேட்பாளர் யார் என நாம்
- ஸ்டாலின்
- எடப்பாடி பழனிசாமி
- விஜய்
- சீமான்
என வரிசைப்படுத்தி கேட்டால் இரண்டில் ஒருவர் 50%-க்கும் அதிகமானோர் முதல்வர் ஸ்டாலின் பெயரை சொல்கின்றனர்.முதல்வராக ஸ்டாலின் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் “நீங்க எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீங்க”ன்னு கேட்டா குறிப்பிட்ட சதவீதம் பேர் அவர்கள் விரும்புகிற மாற்றுக் கட்சிக்கு ஓட்டுப் போட்டனர்.
- ஸ்டாலினுக்கு அடுத்ததாக விஜய்யை மக்கள் தேர்வு செய்கின்றனர்.
- அதேநேரத்தில் 3-வதாக எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்வு செய்தாலும் விஜய்க்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான சதவீத இடைவெளி என்பது ரொம்பவே அதிகமாக இருக்கிறது.
- ஸ்டாலினை பிடிச்சவங்க எல்லாம் மொத்தமாக திமுகவுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்பதைப் போல விஜய்யை பிடிக்கும் என்பவர்கள் அத்தனை பேரும் TVK கட்சியை தேர்வு செய்யவில்லை- TVK-க்கு ஓட்டுப் போடுவோம் என சொல்லவும் இல்லை.
- நமக்கு கொங்கு பகுதியில ரொம்பவே சுவாரசியமான ஒரு விஷயம் கிடைத்தது. அதாவது ”முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான்.. எல்லாம் சரி.. ஏன் அண்ணாமலையின் பெயர் இல்லை? என்கிற கேள்வியையும் நாம் எதிர்கொள்ள முடிந்தது.
- நாமும் அண்ணாமலைதான் பாஜகவில் இருக்கிறாரே? அவர் இந்த பட்டியலில் இல்லையே? அதனால 4 பேரில் ஒருவருக்கு ஓட்டு போடுங்க என சொன்ன போது, அவர்கள் ஸ்டாலினுக்கு போட்டாங்க.. விஜய்க்கும் போட்டாங்க, சீமானுக்கும் போட்டாங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலானோர் போடவில்லை.
- இதன் பின்னணியை பார்த்தால், அண்ணாமலையின் ஆதரவாளர்கள்- அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டவர்கள், அண்ணாமலையால் பாஜகவை ஆதரிப்பவர்கள் , எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கவில்லை.
சிறுபான்மையினர் வாக்குகள்
முஸ்லிம்கள்:
சிறுபான்மையினர் வாக்குகள் பெரிய அளவில் திமுக கூட்டணிக்குதான் செல்கிறது. திமுக கூட்டணி கட்சிகளான முஸ்லிம் லீக், மமக, மஜக, எஸ்டிபிஐ ஆகியவை 6 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன; திமுக 3; காங்கிரஸ் 2; விசிக 1 முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. மொத்தம் 12 முஸ்லிம் வேட்பாளர்களை திமுக கூட்டணி களத்தில் நிறுத்தி உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே களத்தில் உள்ளார்.
தங்களுக்கு இதுபோல முன்னெப்போதும் தேர்தலில் அதிகமான வாய்ப்புகள் கிடைத்தது இல்லை என்பதால் இதைத் தக்க வைத்துக் கொள்ள தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
கிறிஸ்தவர்கள்
கிறிஸ்தவர்கள் வாக்குகளும் முதலில் திமுகவுக்கும் அடுத்தது தவெகவுக்கும் 3-வது அதிமுகவுக்கும் செல்கிறது.
மொழிச் சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை
சர்வே முடிவுகளைப் பார்க்கும் போது
- முதல்வர் வேட்பாளர் போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு 3-வது இடத்தை மக்கள் கொடுத்திருந்தாலும் திமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக அதிமுகவே இருக்கிறது.
- எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவின் கட்சி கட்டமைப்பு, தொண்டர்களின் உழைப்பு உள்ளிட்டவை திமுகவுக்கு சரிசமமான போட்டியை ஏற்படுத்துகிறது
- அதிமுகவின் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றாக நிற்கின்றனர்
- அதே நேரத்தில் அதிமுக- பாஜக கூட்டணி என்பது அக்கட்சியினர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவிலான பலனை இந்த தேர்தலில் கொடுக்கவில்லை
- வடமாவட்டங்களில் பாமகவால் வன்னியர்களும், மேற்கு மாவட்டங்களில் சொந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கொங்கு வேளாள கவுண்டர்களும் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர்
- வன்னியருக்கு 10.5 சதவீதம் தந்த விவகாரத்தில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கான முக்குலத்தோர் வாக்குகளில் இருந்த சரிவை டிடிவி தினகரன் ஓரளவு சரி செய்திருக்கிறார் எனலாம்.
திருப்புமுனை ஏற்படுத்தும் விஜய்
தமிழ்நாட்டு அரசியலில் விஜய் மிக முக்கியமான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்கிறது சர்வே முடிவுகள்.
- இதை எந்த அடிப்படையில் சொல்கிறோம் எனில் விஜய் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் அடிப்படையில்தான்.
- விஜயகாந்த் அதிகபட்சமாக 8.3 சதவீதம் வாக்குகளை வாங்கி இருந்தார். ஆனால் விஜய்யோ, அதை போல 2 மடங்கு.. 16 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவைப் பெறுகிறார் என்கிற போது தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஒரு முக்கியமான திருப்பம்தான்.
- தமிழ்நாட்டில் 3-வது அணி என்பது எப்போதுமே இவ்வளவு பெரிய வாக்கு சதவீதத்தைப் பெற்றது இல்லை.
விஜய்-க்கான ஆதரவு என்பது எங்கே இருக்கிறது
- நகரங்களில் அதிகமாக இருக்கிறது
- குறிப்பாக செல் போன்களை அதிகமாக பயன்படுத்துகிறவர்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது.
- இன்ஸ்டா உள்ளிட்டவைகளில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போடுகிறவர்களும் அவற்றை ரசிக்கக் கூடியவர்களும் விஜய்க்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆதரவு என்பது மேம்போக்கானதாக இல்லாமல் ஸ்டிராங்காக- வலுவாகவே இருக்கிறது.
- குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் மற்றவர்களைவிட விஜய்க்கு அதிக ஆதரவாக இருக்கின்றனர்.
- இவர்களைத் தவிர
திமுகவுக்கு வாக்களித்தவர்களில் 3 சதவீதம்
அதிமுகவுக்கு வாக்களித்தவர்களில் 5 சதவீதம் பேர்
சீமானுக்கு வாக்களித்தவர்களில் 1 சதவீதம் பேர்
விசிக வாக்காளர்களில் 1 சதவீதம் பேர்
பாமக வாக்காளர்களில் 1 சதவீதம் பேர் என விஜய்க்கு வருகிறது. இதில் 11 சதவீதம் வருகிறது.
மாற்றத்துக்கான வாக்கு
தமிழ்நாட்டில் எப்போதுமே மாற்றத்துக்கான வாக்கு என்பது இருந்து கொண்டே இருக்கிறது.
1987-ல் எம்ஜிஆர் மறைந்த பின்னர் 1989 தேர்தலின் போது, “திராவிட கட்சிகளுக்கு மாற்று” என்கிற முழக்கத்தை ஜிகே மூப்பனார் முன்வைத்தார். அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். கிராமங்களைத் தேடிப் போனார் ராஜீவ் காந்தி. காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. அவரால் வெற்றி பெற முடியலை.
மூப்பனாரைப் போல
வைகோ
விஜயகாந்த்
சீமான்
கமல்ஹாசன்
அண்ணாமலை..
இப்படி காலந்தோறும் மாற்றங்களுக்கான முகங்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
- மாற்றத்தை விரும்புகிற வாக்குகளும் அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளும் இளந் தலைமுறையினர் வாக்குகளும் 5 முதல் 6 சதவீதம் சேர்ந்திருக்கிறது.
- நமது முடிவுகளின் படி விஜய்க்கான இந்த 16 சதவீதம் என்பது மாறக் கூடியதாக அதாவது சரிவுக்குரியதாக இருக்காது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஏனெனில்
- விஜய் குடும்ப பிரச்சனை
- விஜய் வருமான வரி பிரச்சனை
- விஜய் பிரசாரத்தை முறையாக மேற்கொள்ளாதது
- தவெக வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம்
- கட்சி மாறிகளுக்கு அதிக முக்கியத்துவம்
- தெளிவான எதிர்கால திட்டமே இல்லாதவர்
- கரூரில் 41 பேர் பலியாக காரணமானவர்
இப்படி எத்தனையோ விமர்சனங்கள் குவிந்தாலும் விஜய்க்கான இந்த 16 சதவீதம் என்பது மாறாததாகவே இருக்கலாம். மிக உறுதியான ஆதரவு சதவீதமாக இந்த 16 சதவீதம் இருக்கிறது.
விஜய்க்கு தற்போது கிடைத்திருக்கக் கூடிய 16.6 சதவீத வாக்குகள் என்பதும் குறையக் கூடிய சாத்தியம் இல்லை எனலாம். விஜயகாந்த் வாங்கிய 8.3 சதவீதத்தை விட டபுளாக வாங்கி இருக்கிறார் விஜய். இந்த சதவீதம் குறையாது எனலாம்.
சீமான் நிலைத்த வாக்கு சதவீதம்
சீமானின் வாக்கு சதவீதத்தை கவனமாக பார்க்க வேண்டும். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.6 சதவீதமும் 2024 மக்களவைத் தேர்தலில் 8.2 சதவீதமும் வாங்கி இருந்தார். இந்த முறை 7.05 சதவீதம் வாக்கு வாங்கி இருக்கிறார்.
சீமானின் இந்த ‘நிலையான’ வாக்கு சதவீதம் எதை உணர்த்துகிறது? எப்படி சாத்தியமானது? எனில்
- சீமானின் இடைவிடாத தொடர் உழைப்பு
- சீமானின் தொடர்ச்சியான தேர்தல் பிரசாரம்
- பெண்களுக்கு சரிபாதி பிரதிநிதித்துவம் கொடுப்பதில் உறுதியான நிலைப்பாடு
- சீமான் தேர்வு செய்து நிறுத்துகிற வேட்பாளர்கள், ‘நம்பிக்கை’யோடு தொடர்ந்து களத்தை எதிர்கொள்வது என பல காரணங்களை சொல்லலாம்..
சசிகலா தாக்கம்
அதே மாதிரி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா சில தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். முதுகுளத்தூர், திருமங்கலம், சாத்தூர் ஆகிய தொகுதிகளில் சுமார் 10,000 ஓட்டுகளை சசிகலா கட்சி வேட்பாளர் வாங்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இது எல்லாமே அதிமுகவின் வாக்குகள். அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செல்லக் கூடிய வாக்குகள். அந்த வாக்குகளையே சசிகலா கட்சி பிரிக்கிறது.
சர்வே அனுபவங்கள்
இந்த வாக்கெடுப்பின் போது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அதிகம்.
பொதுவாக சட்டசபை தொகுதிகளில் சிறு நகரங்கள், கிராமங்களில் பெண்களை சந்தித்து கருத்து கேட்பது என்பது எளிதாகவே இருந்தது.
பெருநகரங்களில் இது மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது. உதாரணமாக சென்னை மாநகரில் நாங்கள் இந்த கருத்து கணிப்பை மேற்கொண்ட போது
- சில அபார்ட்மெண்ட்டுகளில் உள்ளே நுழையவே முடியாத நிலை.. இது தொடர்பாக நாம் அனுமதி கேட்கிற போது, “செகரட்டரியை” பாருங்க என்றனர்.. செகரட்டரியை சந்தித்து பேசினால், “நாங்க மீட்டிங் போட்டுதான் அனுமதிக்கிறதா இல்லையா”ன்னு சொல்வோம் என்றனர். சரி என நாமும் காத்திருந்தால், “சார் கருத்து சொல்ல எங்கள் யாருக்குமே விருப்பமே இல்லை.. நீங்க சர்வே எடுக்க வந்து அபார்ட்மெண்ட்டில் தேவையில்லாமல் தகராறு வந்துவிடும்” என நூதனமான காரணங்களை சொல்லியும் அனுப்பி வைத்துவிட்டனர்.
- அதேபோல தனி பங்களாக்கள்.. அங்கேயும் உள்ளே நுழைய முடியாத நிலைமை இருந்தது.. அங்கே இருந்த வாட்ச்மேன்களிடம் தகவலை சொல்லி அனுப்பினால் உள்ளே இருந்து, “எங்களுக்கு எல்லாம் இன்ட்ரஸ்ட்டே இல்லை.. போக சொல்லுங்க” என பதில் வந்து விழுந்தது.
இதற்காக நமது மின்னம்பலம் மீடியா அவர்களின் கருத்தை கேட்காமலா இருக்க முடியும்?
பொதுவாக பெண்கள் அதிகமாக செல்லக் கூடிய,
- கோவில்கள்
- பூங்காக்கள்
- ஜிம்
- ஷாப்பிங் மால்கள்
- அந்த பகுதி ஹோட்டல்கள்
ஆகியவற்றை கவனித்து அங்கே போய் இவர்களிடம் கருத்து கணிப்புகளைப் பெற்றோம்.
அதே நேரத்தில் சிறு நகரங்கள், நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் பெண்கள் மிக ஆர்வமாக நமது கேள்விகளுக்கு பதில்களைத் தந்தார்கள். பெண்கள்தான் என்று இல்லை.. ஆண்களும் அதேபோல ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மக்களிடம் இருந்து பெற்றவை
- நகரங்களை விட கிராமப்புறங்களில் மக்களிடம் மிகப் பெரிய ஆர்வம் இருப்பதை நாம் பார்க்க முடிந்தது.
- கிராமப்புற மக்கள், யாருக்கு ஓட்டுப் போடுவது என்கிற முன் முடிவுடன் இருந்தனர். அதாவது எந்த குழப்பமும் இல்லாமல், “நாங்க இவருக்குதான் ஓட்டுப் போடப் போகிறோம்” ”நாங்க இந்த கட்சிதான்” “எங்களோட சின்னமே இதுதான்” “பரம்பரையா நாங்க இந்த தலைவருக்குதான் ஓட்டு போடுவோம்” என்பதை தெளிவாகவே தெரிவித்தனர்.. குழப்பங்கள் அதிகம் இல்லாத பதில்களை கிராமப்புற மக்கள் நமக்கு கொடுத்தனர். கிராமப்புற மக்களின் தெளிவான இந்த அரசியல் பார்வை ஆச்சரியமானதாகவும் இருந்தது.
- மக்களிடம் நாம் பெற்ற அனுபவங்களில் முக்கியமானது.. வேட்பாளர்கள் பற்றி விவரம்தான்..அதாவது ஒரு வேட்பாளர் நல்லவரா/ கெட்டவரா? என்பதை பற்றி எல்லாம் அலசி ஆராயக் கூடியவர்களாக கிராமப்புற மக்கள் இல்லை.
-அதே நேரத்தில் அரசின் திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் போன்றவை எல்லாம் மிகப் பெரிய அளவில் கிராமப்புறங்களில் கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திமுக அரசின் திட்டம் மிகப் பெரிய அளவில் பெண் வாக்காளர்களிடம் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது.
தேர்தல் அறிக்கைகள்- தேர்தல் பிரசாரங்கள் மூலமாக தரப்படுகிற வாக்குறுதிகள் பற்றி நாம் மக்களிடம் பேசிய போது, “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தா ரூ2,000 ஆக கூட்டிடுவார்” என்ற நம்பிக்கையை அதிகமானோர் வெளிப்படுத்துகின்றனர்.
மக்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் நமது சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளோம். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறுகிறது; வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்களின் இறுதியான முடிவு அன்றைய நாளில் வெளிப்படும்.
