விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், பாஜக கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர்.
இதில் காலை 11 மணி நிலவரப்படி விஜய பிரபாகரன் 46,500 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மாணிக்கம் தாகூர் 44351 வாக்குகள் பெற்று 2,149 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 18185 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா