விருதுநகர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

விருதுநகர் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

விருதுநகர் தொகுதி.. இதுவும் ஸ்டார் தொகுதி.. திமுக கூட்டணியில தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இங்கே களம் காண்கிறார்.

2024 லோக்சபா தேர்தலில் இங்கே விஜய பிரபாகரன், அதிமுக கூட்டணியில போட்டியிட்டாரு.. அப்ப காங்கிரஸின் மாணிக்கம் தாகூருக்கு மிக கடுமையான போட்டியை கொடுத்தாரு. யாரு ஜெயிப்பாங்கன்னு கணிக்க முடியாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கை இருந்துச்சு. 4,379 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மாணிக்கம் தாகூர் ஜெயிக்க முடிந்தது.

அங்கே நாயுடு/ நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமான வாக்காளர்கள்.

விருதுநகர்,விஜயகாந்தின் பூர்வீகம்னு சொல்லுவாங்க.. தேமுதிகவுக்கு தொடக்கம் முதலே நல்ல பேஸ் உள்ள தொகுதி.

இங்கே அதிமுக வேட்பாளராக விஜி கணேசன் நிற்கிறார்..

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி -42 %
அதிமுக – 36%
தவெக- 15%
நாதக- 6% வாக்குகள் பெறும்

இப்போதைக்கு விஜய பிரபாகரன் 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்துல முன்னிலை வகிக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? விருதுநகர் | Virudhunagar | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share