தேர்தலில் வெற்றி பெற விஜய் மும்மத வழிபாடு!

Published On:

| By Kavi

திருச்சி கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு சென்ற விஜய் மும்மத வழிபாடு நடத்தியுள்ளார். 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

ADVERTISEMENT

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய் ஏதாவது ஒரு தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார். 

நேற்று முன்தினம் பெரம்பூர் தொகுதிக்கு சென்ற விஜய், தேர்தல் பணிமனை வாசலில் விசில் கோலமிட்டு வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். 

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று திருச்சி கிழக்கில் ரோடு ஷோ நடத்திய விஜய், கோயில், மசூதி மற்றும் தேவாலயத்துக்கு சென்று  அந்தந்த முறையில் வழிபாடு செய்துள்ளார். 

திருச்சி அந்தோனியார் ஆலயத்தில் முழங்காலிட்டவாரே சென்று, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். 

ADVERTISEMENT

தொடர்ந்து கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்ற விஜய் தேர்தலில் வெற்றி பெற மனமுருகி வேண்டிக்கொண்டார். 

அதுபோன்று அருகில் இருந்த மசூதிக்கும் சென்று வழிபாடு செய்தார். 

விஜய்யின் இந்த மும்மத வழிபாடு தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share