வெற்றிமாறன் கதையை நிராகரித்த ராகவா லாரன்ஸ்

Published On:

| By Minnambalam

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக 2021 ஜூன் 24 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த செய்திகுறிப்பில், “ ’அதிகாரம்’ என்று பெயரிடப்பட்ட படத்துக்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார். அவருடைய உதவியாளர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் படத்தை இயக்குவார். இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும்.

ADVERTISEMENT

மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களைக் கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், ஃபைவ்ஸ்டார் எஸ்.கதிரேசன், வெற்றிமாறன், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஆகிய நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நயன்தாரா நடிக்கும் புதிய படமொன்றை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ADVERTISEMENT

அப்படியானால் அதிகாரம் படத்தை துரை.செந்தில்குமார் இயக்குவார் என்று ஜூன் மாதம் அறிவித்தது என்னவானது என்று விசாரித்தால், ’வெற்றிமாறன் சொன்ன கதை ராகவா லாரன்சுக்குப் பிடிக்கவில்லையாம்.

ஓரிருமுறை கதையில் மாற்றம் செய்து அதையும் ராகவா லாரன்சிடம் போய்ச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். எதுவும் அவருக்குத் திருப்தியாக அமையவில்லை என்பதால் அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் ராகவா லாரன்ஸ்.

அதனால்தான், நயன்தாரா படத்தை இயக்கப் போய்விட்டாராம் துரை.செந்தில்குமார்’ என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இராமானுஜம்

தேவாவுக்காக வேண்டுகோள் வைத்த ரஜினி

மீண்டும் புதிய கோணத்தில் பாபா

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share