மீண்டும் புதிய கோணத்தில் பாபா

சினிமா

ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்த் படத்தை தயாரித்தும் இருந்தார்.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா.

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மகாஅவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தபடம் வெளியான சமயத்தில், பாட்டாளி மக்கள்கட்சி வட மாவட்டத்தில் திரையரங்குகளுக்கு சென்னையிலிஇருந்து பஸ்ஸில் அனுப்பப்பட்ட படச்சுருள் பெட்டியை பறிமுதல் செய்தது.

பாமகவிற்கு எதிராக ரஜினிகாந்த் அரசியல் அரங்கில் பேசியதால் இந்த நடவடிக்கையை பாமக மேற்கொண்டது.

அதனையும் கடந்து பாபா படம் கௌரவமான வசூல் செய்தது திரையரங்குகளில்.

rajinis baba movie again relese

குறிப்பாக இந்தப் படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடி காட்டும் அந்த ‘பாபா’முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பாபா படம், மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.

இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறுபடத் தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர்கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ்செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

படத்திற்கான சிறப்பு சப்தங்களும்கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன. 2002க்கு பின் பிறந்த இன்றைய இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக பாபா படம் இருக்கப்போகிறது.

இராமானுஜம்

தேஜா சஜ்ஜா மிரட்டும் ஹனுமான் டீசர் வெளியீடு!

தேவாவுக்காக வேண்டுகோள் வைத்த ரஜினி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *