தேவாவுக்காக வேண்டுகோள் வைத்த ரஜினி

சினிமா

இசையமைப்பாளர் தேவா தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், அவரது ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவும் தேவாவின் இசை நிகழ்ச்சி கடந்த நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், வைரமுத்து உள்பட பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது, ‘பாட்ஷா’ படத்தின் மாஸான பி.ஜி.எம். ஒலிக்க, அந்த படத்தின் பாணியில் கோட்சூட் போட்ட நால்வருடன் ரஜினி மேடையேறியபோது ரசிகர்களின் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.

அப்போது மேடையில் பேசிய ரஜினி, “சிங்கப்பூர் நாட்டில் அதிபராக இருந்தவர் நாதன். தமிழரான அவர் மலேசியாவில் வாழ்ந்தவர்.

அவர் இறப்பதற்கு முன், அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, ’நமது இயக்குநர் சேரனின் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் இடம் பெற்ற, தேவா இசையமைத்து, வைரமுத்து எழுதியிருந்த தஞ்சாவூரு மண்ணு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

நான் இறந்த பிறகு அந்த பாடலை ஒலிக்கவிட்டு, அதன் பின்னர்தான் எனது உடலை எடுத்துச் செல்ல வேண்டும்’ என எழுதியிருந்தார்.

அதேபோல் சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்த பின்னர் அவரது உடலை கொண்டு சென்றபோது, உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இந்தப் பாடலை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் என பல நாடுகளில் மொழி பெயர்த்து பத்திரிகைகளில் எழுதியிருந்தனர்.

ஆனால், எந்த தமிழ் ஊடகமும் அது குறித்து எழுதவில்லை. அப்போது தேவாவுக்கு மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்…? இதனால், தயவு செய்து இது போன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளி உலகிற்கு சொல்ல வேண்டும் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

இராமானுஜம்

விநியோக உரிமை: துணிவை தாண்டிய வாரிசு

தேஜா சஜ்ஜா மிரட்டும் ஹனுமான் டீசர் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *